பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் ss.

என்றும் கலித்தொகை அடிகள் வெப்பமிக்க பாலை நிலத்தில் வருவோரைக் குறிப்பன. எனவே, வெய்யிலுக்குக் குடை, உரியில் வைத்துத் தோளில் தொங்கவிடப்பட்ட குடிநீர்ச் செம்பு, துறவிக்குரிய முக்கோல் கூறப்பட்டன. இவ்வர்ணனை பார்ப்பனரை குறிப்பதன்று. பூணுால், தருப்பை, நான்மறை குறிக்கப்படாமையும் இதனை அறிவிக்கிறது. எனவே துறவிகளையே குறிக்கும்.

இவ்வாறு பார்ப்பனத் துறவிகளும் குறிக்கப்பட்டனர். பார்ப்பனர் அல்லாத - நான்மறைக்கு எதிர்ப்பான - நான்மறையைப் புறக்கணித்த துறவியரும் அந்தணர்’ என்று குறிக்கப்பட்டனர்.

"குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளி' !

சான்று மாங்குடி மருதனார் பாடினார். இதில் பள்ளி' என்னும் சொல் உள்ளது. இச்சொல் 'இடம், படுக்கை' என்னும் பொருள்களைக் கொண்டது. இடம் என்ற பொருளில் துறவியருள் பெளத்தரும், சமணரும் தங்கும். இடங்கள் பெளத்தப் பள்ளி, சமணப்பள்ளி எனப்படும்.

'புறங்காக்கும் கடவுட் பள்ளி' "

என்பதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் :பெளத்தப் பள்ளி' என்று எழுதினார். ஆனால், அவரே மேலே கண்ட 'அந்தணர் பள்ளி' என்பதற்குப் பிரமவித்துக்கள் இருப் பிடம் என்று பள்ளியை (சமணர், பெளத்தர் பள்ளியை) விடுத்து பார்ப்பனத் துறவியரை எழுதினார்.

1 மாங்குடி மருதனார் : மது.கா: 457 2. மாங்குடி மருதனார் : மது.கா: 467