பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


தாற் பகுத்து வேறுபட நினைக்கும் நினைவற எங்கும் எல்லாமாய் விளங்குகின்றான் என ஒருதன்மையாய் நினைந்து போற்றும் உணர்வினைப் பெறுவாயானால் உன்னிடத்திலே சிவன் திருவருளோடுங் கூடிப் பொருந்துவன். வேறுபட நினையாமைக்கு உபாயமாக ஞானசாத்திரங்கள் ஆராய்ந்தறிந்து ஆன்ம போதத்தை ஒழிப்பாயாக. அன்றி ஈசன்பால் நீங்காத பேரன்பு கைகூடினால் அறுபத்து மூவராகிய நாயன்மார்களைப் போலத் திருத்தொண்டிலே பொருந்தி ஆன்ம போதத்தை ஒழிப்பாயாக. இவையிரண்டும் இயலாவாயின் உன்னால் இயன்ற அளவு சிவபணிவிடைகளைச் செய்வாயாக’’ எனப் பொருள் கூறுவதும் உண்டு,

இவ்வாறு பொருள் கொள்வோர் “ஆன்ம விகாரமற் றிருத்தற்கு மூவகையுபாயம் சொன்னது கண்டு கொள்க” என இச்செய்யுட்குக் கருத்துரைப்பர்.


உ௭. அவிழ விருக்கும் அறிவுட னின்றவர்க்
கவிழுமிவ் வல்லலென் றுந்தீபற
அன்றி அவிழாதென் றுந்தீபற.

இது, சிவயோக நெறியில் ஒன்றியிருப்பார்க்குப் பசு பாச விகற்பங்களாகிய அல்லல் தீரும் என அருளிச்செய்கின்றது.

(இ-ள்) உலகு உயிர் என்னும் எல்லாப் பொருள்களிலும் பிரிவறக் கூடியிருப்பினும் அவற்றிற் பிணிப்பின்றி அப்பாற்பட்டு விளங்கும் பேரறிவுப் பொருளாகிய திருவருளின் வழியே யடங்கி நிற்பார்க்கு இவ்வுலகிற் பசு பாசப் பிணிப்பாகிய துன்பங்கள் யாவும் தன்னியல்பில் விட்டு நீங்கும். திருவருளின்வழி ஒத்து நின்றாலன்றி வேறெந்த வழிகளாலும் இத்துன்பம் நீங்காது எ-று.

அவிழ இருக்கும் அறிவு என்றது, இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்கும் இறைவனது திருவருள் ஞானத்தினை. உடன் நிற்றலாவது, தற்போதம் கெடத் திருவருள்வழி யமைந்து ஒழுகுதல். இவ்வல்லல் என்றது, இவ்வுலகியலிற் பல்வகையாலும் உயிர்கள் நுகர்தற்குரிய துன்பங்களெல்லாவற்றுக்கும் காரணமாகிய பாசப்பிணிப்பினை.

உலகிற் புறவிருள் நீங்கத் தோன்றும் கதிரவன் முன்னிலையிலே கண்ணிருள் நீங்கி விலகுமாறுபோல, சிவமாகிய செஞ்ஞாயிற்றின் முன்னிலையிலே பசுபாச விகற்பங்களாகிய அகவிருள் நீங்கியொழியும் என்பார், “அவிழ விருக்கும் அறிவுடன் நின்றவர்க்கு அவிழும் இவ் வல்லல்” என்றார். அறிவுடன் நிற்றல்-ஆன்மா பேரறிவுப் பொருளுடன் ஒன்றியிருத்தல். இதுவே யோகம் எனப்படும். இது ஞான