பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

129


80. தாரத்தோ டொன்றாவர் தாரத்தோர் கூறாவர்
தாரத்தோ டெங்குந் தலைநிற்பர் - தாரத்தின்
நாதாந்தத் தேயிருப்பர் நாற்றானத் தேயிருப்பர்
வேதாந்தத் தேயிருப்பர் வேறு.

இது, மன்னுயிர்கள் உய்தற் பொருட்டு இறைவன் நிகழ்த்தி யருளும் ஐந்தொழில்களுக்கும் அம்முதல்வனது ஆற்றலாகிய சிவசத்தி உடனாய் நிற்க அம்முதல்வன் தன்ஆணையாகிய சத்தியுடன் நீக்கமின்றி நிற்குமாறு உணர்த்துகின்றது.

(இ-ள்) சிவபெருமான் தம் தேவியாகிய சிவசத்தியுடன் ஒன்றாகி யிருப்பர்; சத்தியைத் தனது ஒரு பாகத்தே கொண்டிருப்பர்; சத்தியுடன் எவ்விடத்தும் முற்பட்டு நிற்பர்; சத்தியுடனே நாதமுடிவிலே யிருப்பர். நாலாம் நிலையாகிய நின்மல துரியநிலையிலே திருவருட் சத்தியுடன் கூடியிருப்பர்; வேத முடிவிலே முடிந்த பொருளாய் இவற்றின் மேற்பட்டுச் சிறந்து விளங்கும் பராசத்தியிலே நிலைத்திருப்பர் எ-று.

தாரம்-மனைவி; இங்குத் “தாரம்” என்றது, சிவபரம் பொருளை விட்டு நீங்காத அப்பொருளின் ஆற்றலாகிய சத்தியினை. படைப்புக் காலத்தே உயிர்கள் நுண்ணுடம்பில் விழைவு அறிவு செயல்களோடு தங்குதற் பொருட்டு இறைவன் தன்னுடைய சத்தியைத் தோற்றுவித்துத் தானும் அந்தச் சத்தியுடனே கூடி விழைவறிவு செயல்களின் உருவாய்த் திகழ்தலின், “தாரத்தோடு ஒன்றாவர்” என்றார். அவ் வுயிர்களது உடம்பு பருவுடலாய் ஆணும் பெண்ணுமாய்ப் பகுப்புண்ணுதல் வேண்டி மாதொரு பாகராகத் திகழ்தலின், “தாரத்து ஓர் கூறு ஆவர்” என்றார். அவ்வுயிர்களுக்கு மலப்பிணிப்பு கழலுதற்குரிய பக்குவம் உண்டாதற் பொருட்டுத் தன் சத்தியுருவான அயன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன், எனக் கூறப்படும் திருமேனிகளுடனே உள்ளுருவான ஓங்கார வடிவாய் உயிர்களிடத்திலே மாயாகாரியமான தத்துவங்களுடன் கூடி நடத்துதலின் “தாரத்தோடு எங்கும் தலைநிற்பர்” என்றார். தலைநிற்றலாவது, முற்பட நின்று செயல் புரிதல். உயிர்களையும் அவை பெற்றுள்ள தத்துவங்களையும் மீண்டும் பிரித்தல் வேண்டி விகாரமற்ற மாமாயையெனப்படும் சுத்தமாயையினைத் தொழிற்படுத்தும் தனது ஆற்றலாகிய விந்து சத்தியுடன் நாத முடிவிலே தங்கியிருப்பர் என்பார், "தாரத்தின் நாதாந்தத்தே யிருப்பர்” என்றார். உயிராவண மிருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியின் உருவெழுதித் தம்மை இறைவனுடைமையாகக் கொடுத்துத் தன் செயலற இறைவன் திருவருள்வழி ஒன்றி வாழும் அன்புடைய அடியார்கள் இறைவனைத் தம் உடம்பின்

17