பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

139


இவ்வருள் நிலையிலே சிவம் ஒன்றுமே பொருளாக விளங்கித் தோன்ற யான் சிவத்தோடொன்றிச் சிவாநுபவத்தினை நுகருமாறு போலவே மாணவனாகிய நீயும் ஆன்மபோதங்கெடச் சிவசொரூபமாகியே யிருத்தலல் லாமல், தற்போதத்தால் சிவமென்று ஒருபொருளைப் பாவிக்கின்றவர்களும் அப்பாவனையாற் சிவபரம்பொருளிலே சென்று பொருந்துகின்றவர்களும் இப்பூமியின்கண் உண்டோ? (இல்லை” எனவும், -

“சிவபரம்பொருளே பக்குவமுள்ள ஆன்மாவைத் தன்னருளால் அகத்திட்டுக் கொண்டு சிவசொரூபமாக விளங்கித் தோன்ற அதன் அருட்டுணை கொண்டு யான் அப்பொருளை நினைந்து போற்றும் அருள்வாய்ப்பினைப் பெற்றாற் போல, மானாக்கனாகிய நீயும் ஒரு விகற்பமுங் கூடாமல் சிவசொரூபமே சொரூபமாக இருத்தலன்றித் தன்னையும் ஒரு வினைமுதலாகக் கொண்டு தற்போதத்தால் சிவபரம்பொருளை உள்ளவாறு உணரவல்லவர்களும் அவ்வாறுணர்ந்த ஆன்ம போதங்கெட அம்மெய்ப்பொருளிலே சென்று பொருந்துகின்றவர்களும் இப்புவியின்கண் உண்டோ” -

எனவும் இப்பாடற்குப் பொருள்விரித்துரைத்தலும் உண்டு.

உணர்தல்-உயிர் தன்னறிவினால் உணர்தல். புணர்தல்-அம்மெய்ப்பொருளோடு தானே சென்று கலத்தல், உண்டோ என்புழி ஓகாரம் இல்லையென எதிர்மறைப்பொருள் தந்து நின்றது.

தானே சிவத்தையுணர்தற்கும் தற்போதங்கெடச் சிவத்துடன் கூடி யின்புறுதற்கும், உரிய ஆற்றல் குறையுணர்வுடைய ஆன்மாவுக்கு இல்லையென்பதும், ஆன்மா சிவத்துடன் கூடுதற்குத் திருவருளின் துணை இன்றியமையாததென்பதும் கருத்து

மேற்காட்டிய திருவுந்தியாரில், “அறிந்தறியா வண்ணம்உந்தீபற” என்ற தொடர்க்கு அமைந்த பொருள் விளக்கமாக இத்திருக் களிற்றுப்படியார் பாடல் அமைந்திருத்தலறிக.


௯௬. அதுவிது வென்னா தனைத்தறி வாகும்
அதுவிது வென்றறிந் துந்தீபற
அவிழ்ந்த சடையானென் றுந்தீபற.

இது, சிவமும் ஆன்மாவும் பொருட்டன்மையால் வேறாயினும் உலகுயிர்கள் எல்லாமாகி அவற்றைத் தனது விரிவுக்குள் அகத்திட்டுக் கொண்டு திகழும் பேரறிவுப் பொருள் சிவமாதவின்