பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

167


சூட்டும்’ (சித்தியார் - பாயிரம்) எனவும், திருக்களிற்றுப்படியாரில் ‘சிந்தையிலு மென்றன் சிரத்திலுஞ் சேரும்வகை வந்தவனை மண்ணிடை நாம் வாராமல் தந்தவனை’ (திருக்களிற்றுப்படியார் - 100) எனவும் வரும் ஏதுக்களைக் கண்டு கொள்க (சிவப்பிரகாசம்) என வரும் மதுரைச் சிவப்பிரகாசர் உரை இங்கு ஒப்புநோக்கி யுணர்தற்குரியதாகும்.


ஞானாசிரியர் வாழ்த்தாக அமைந்த இத்திருவுந்தியார் பாடல்,

 “நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க’’
                                                   (திருவாசகம் - சிவபுராணம்)

எனத் திருவாதவூரடிகள், தமக்குக் குருவாகத் தோன்றி மெய்யுணர் வளித்தருளிய ஞானாசிரியனை வாழ்த்திய திருவாசகச் செழுமறைப் பொருளைத் தன்னகத்தே கொண்டு திகழ்தலைக் கூர்ந்து நோக்குங்கால் திருவுந்தியார் என்னும் இம்மெய்ந்நூலை அருளிச்செய்த திருவியலூர் உய்யவந்த தேவநாயனர் என்னும் சிவயோகியார், திருவாதவூரடிகளைக் குருவாகக்கொண்டு தொடர்ந்து வரும் சைவாசிரியர் வழி முறையில் வந்தவர் என்னும் உண்மை நன்கு புலகுைம்.

இத்திருவுந்தியார் பாடலின் பொருளை விளக்கும் முறையிலும் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் தமக்கு இந்நூலை யுபதேசித்தருளிய ஞானகுருவாகிய ஆளுடைய தேவநாயனரைப் போற்றும் முறையிலும் அமைந்தது.

100. சிந்தையிலு மென்றன் சிரத்தினிலுஞ் சேரும்வகை
வந்தவனை மண்ணிடை நாம் வாராமல்-தந்தவனை
மாதினுட னெத்திறமும் வாழ்ந்திருக்க வென்பதலால்
ஏதுசொலி வாழ்த்துவே னின்று.

எனவரும் திருக்களிற்றுப் படியாராகும்.

(இ-ள்) (தன்னுடைய அழகிய செந்தாமரை மலர் போலுந் திருவடிகள்) என்னுடைய நெஞ்சத் தாமரையிடத்தும் தலையின் மேலும் சேரப் பொருந்தும் வண்ணம் ஆசிரியத் திருமேனிகொண்டு எழுந்தருளி வந்து அடியேனை ஆண்டுகொண்டருளியவனும், நம்ம