பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


இது, சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத சிவபரம்பொருளைக் கூடுதற்குரிய இடம் இதுவென்கிறது.

(இ - ள்) பலவிடத்தும் இடம்பெயர்ந்து ஓடுதலின்றி எங்கும் ஒருநீர்மையாய்ப் பரவி நிற்கின்ற திருவருளாகிய ஊரிலே சென்று நேர்பட்டு அப்பால் (ஆன்மா தனக்குறுபொருளாக) வேறெதனையும் தேடாமல் நின்ற இடமே சிவம் விளங்கித்தோன்றும் இடமாகும். அந்த இடம் ஆன்மபோதத்தால் தேடியடைதற்குரிய இடமன்று எ

ஓடுதலாவது, ஒரிடத்தும் நிலைத்தலின்றி இடம்பெயர்தல், யாதோரசைவுமின்றி உலகுயிர்கள்தோறும் ஒருங்கே பரவிவிரிந்து நிற்பது ஞானமயமாகிய திருவருளாதலின், அதனே ஓட்டற்று நின்ற உணர்வு’ என்றார், பதி - ஊர். 'பொய்க்காட்சியான புவனத்தை விட்டு அருளாம் மெய்க்காட்சியாம் புவனம் மேவுநாள் எந்நாளோ என்றார் தாயுமானாரும். பதி ஞானம் எனினும் பொருந்தும். ‘தண்ணிழலாம் பதி’ என்றார் மெய்கண்டாரும். முட்டுதல் - நேர் படுதல். தேட்டற்று - (ஆன்ம அறிவினல்) தேடுதல் அற்று, நின்ற இடம் - நிலைபெற்ற திருவருளாகிய இடம்.

இத்திருவுந்தியார்க்கு உரைவிளக்கமாக அமைந்தது, பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும்.


29. ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித்
தேட்டற்று நின்ற இடஞ்சிவமாம் - நாட்டுற்று
நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத்
தேடுமிட மன்று சிவம்.


இது, திருவருள் ஞானம் ஒன்றினாலேயே சிவம் வெளிப்பட்டுத் தோன்றும் என்கிறது.

(இ-ள்) அசைவற்று உலகுயிர்தோறும் விரிந்து நிலைபெற்றுள்ள திருவருள் ஞானமாகிய பதியுணர்வை நேர்பட்டு அப்பால் மற்றெந்தப் பொருளையும் தேடுதலற்றிருக்கிற அவாவற்ற தூய நிலையே சிவம் விளங்கித் தோன்றும் இடமாகும். ஆன்மவறிவினால் நாடுதலுற்றுச் சுட்டியுணர்தற்குரிய பொருள்கள் அனைத்தையும் பலவாறாக ஆராய்ந்து தேடிக் காணுதற்குரிய எல்லைக்கண் உள்ளது சிவபரம் பொருள் அன்று எ-று.

ஓடு, தேடு, நாடு எனவரும் நெடிற்ருெடர்க் குற்றியலுகரமாகிய வினைப்பகுதிகள் ஒற்றிரட்டித்து வந்தன. நாடும் பொருள் என்பது, உயிர்களாற் சுட்டியுணர்தற்குரிய நிலையில்லாத பொருள்களை. உயிர்களாற் சுட்டியுணரப்படும் பொருள்கள் யாவும் ஒரு