பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நா. பார்த்தசாரதி: பெருமையும் மிக்க அமைப்பு எடுத்துரைக்கப்படுகிறது. முன்னரே அரங்கேற்று காதையில் அரங்கு அமைக்கப்பட். டிருந்த விதம் பற்றிக் கூறுகையில், 'எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு' என்று கூறியுள்ளனர். கட்டிடக்கலை வல்லுநர் ஆய்ந்து சொல்லிய நடன அரங்க அமைப்பின் இலக்கணத்திலிருந்து வழுவாமல் அரங்கு அமைத்து என்பதால் அரங்க அமைப் புக்கென்றும் சிறப்பான கட்டிடக் கலை நூல் இருந்ததை. அறியலாம். இனி நகரமைப்புப் பற்றிக் காண்போம். சேர,சோழ, பாண்டியர் தலைநகரங்களான வஞ்சி, பூம்புகார், மதுரை நகரங்களும் உறையூர், காஞ்சி போன்ற பிற சேர நகரங் களும் தமிழர்தம் நகரமைப்புக்கலைக்கு (Town Planningor urban planning) எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கின் றன. தாமரைப் பூவைப்போல் வடிவமைக்கப்பட்ட நகரம் மதுரை என்று அதன் பெருமையைப் பரிபாடல் என்ற சங்க நூல் கூறுகிறது. தாமரை மலரின் மையப்பகுதியான பொகுட்டாகக் கோவிலும், பூவின் இதழ்களாகத் தெருக்களும் அமைந் துள்ள அழகைப் பரிபாடல் கூறுகிறது. கோவிலைச் சுற்றி" ஆடி வீதி. சித்திரை வீதி, ஆவணி மூலவீதி, மாசிவீதி, வெளிவீதி என இதழ்களின் அடுக்குப் போல அமைந்துள்ள இன்றைய வீதியமைப்பு முறையும் தாமரைப்பூ உவமைக்கு ஏற்றதாகவே உள்ளது. இப்பெயர்கள் கோவிலின் திரு விழா நிகழும் நாள், மீன் கோள் முதலியவற்ருேடு தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளன. "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீரூர் பூவின்