பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 " . . . கா. பார்த்தசாரதி திருவெண்ணெய்நல்லூர் : இறைவன் குடிகொண்ட திருத்தலமாகிய வெண் ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்ட புராணத்தில் சிறப் பிடம் பெறுகிறது. இறைவன் என்னும் பழைய மன்ருடி முதுமைக் கோலம் பூண்டு மணம் வந்த புத்துாருக்கு வந்து வழக்காடும் போது தனது ஊரான வெண்ணெய் நல்லூர் பற்றிக் குறிப்பிடுகிருன். 'என்றலும் நின்ற ஐயர், - 'இங்குளேன், இருப்புஞ் சேயது அன்றிந்த வெண்ணெய் நல்லூர், அதுநிற்க, அறத்தாறின்றி வன்றிறல் செய்தென் கையில் ஆவணம் வலிய வாங்கி நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினன் அடிமை' என்ருன். இவ்விதம் இறைவன் மூலமாகத் தன் ஊர் வெண்ணெய் நல்லூர் எனக் குறிக்கப்படுகிறது. மீண்டும் ஆரூரர் இறை வனே நோக்கிப் பேசும் போது, வெண்ணெய் நல்லூரா யேல் உன் பிழைநெறி வழக்கை அங்கேயே பேசு' என்கி குழைமறை காதி னைக் கோதில் ஆரூரர் நோக்கிப் பழையமன் ருடி போலும் இவன் என்று பண்பின் மிக்க விளைவுறு மனமம் பொங்க வெண்ணெய்நல் லூரா யேல்உன் பிழைநெறி வழக்கை ஆங்கே பேசநீ போதாய்' என்ருர், வெண்ணெய் நல்லூரை நோக்கி இறைவனும் ஆரூரரும் நடக்கும்போதும், மீண்டும் வெண்ணெய்நல்லூரின் பெயர் கூறிச்சுட்டப்படுகிறது.