பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கா. பார்த்தசாரதி இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கிவை என் எழுத்து' இறுதியில் இறைவன் காட்சி தந்து நம் புகழ் பாடு’ எனக்கூறி மறையும் போதும் வெண்ணெய் நல்லூர் சுட் டப்படுகிறது. . சொல்லார் தமிழ் இசைபாடிய தொண்டனதனே இன்னும் பல்லாறுல கினில் நம் புகழ் பாடென்றுறு பரிவில் நல்லார் வெண்ணெய் கல்லூர்:அருள் துறைமேவிய நம்பன் எல்லாஉல குய்யப்புரம் - எய்தான் அருள் செய்தான்'

மீண்டும் மீண்டும் வெண்ணெய் நல்லூர் சுட்டப்படுவ தற்குத் தகுந்த காரணம் இருக்க வேண்டும். தடுத்தாட் கொண்ட புராணத்தின் முக்கியப் பகுதி வெண்ணெய் நல் லூரில் இறைவன் காட்சி தருவதே. அந்தத் திருக்காட்சி இடைத்த பின்னரே, ஆரூரரது வாழ்க்கை, தொண்டர் தம் பெருவாழ்வாக மலர்ச்சியுறுகிறது. இந்தப் பெருமாற் றத்தை நிகழ்விக்கக் காரணமாக இருந்த ஊராகலின் அது மீண்டும் மீண்டும் பெயர் கூறியே சுட்டப்பட்டதாதல் வேண்டும். - . . . . .

திருத்துறையூர் : ; : . . . - நம்பியாரூரர் திருத்துறையூர் சென்ற செய்தி ஒரு பாடல் மூலம் உரைக்கப்படுகிறது. தவநெறி தந்தருள்' என இறைவனை வேண்டிப் பவநெறிக்கு விலக்காகும் திருப் பதிகத்தைத் திருத்துறையூரில்தான் பாடுகிருர் ஆரூரர். 'சிவனுறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்