பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144. நா. பார்த்தசாரதி சொற்களை மலிவாக்கும் வாக்கியங்களையே இன்று தமிழில் அதிகம் காணமுடிகிறது. "மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்று பாரதி பாடிய தமிழ் பெருக வேண்டும். சக்தி வாய்ந்த சொற்பிரயோகம் பெருகவேண்டும். கிணற்றுக் கேணிகளிலே பானைக் குடங்கள் கொண்டு பளிங்கனைய பருகுநீர் ஏந்தி மங்கை மடந்தையர் பாதச் ரேடியால் நட்ை பயின்றனர் என்பது போல் ஒவ்வோர் அர்த்தத்திற்கும் இரண்டி ரண்டு வார்த்தைகள் பலியிடப்பட்ட தமிழ் விக்கியங் களே இன்று ஏராளம். ஒரு தீக்குச்சியில் விளக்கேற்றத் தெரியாமல் தீப்பெட்டி முழுவதும் கீறிக் கீறி வீஞ்க்கி விளக்கேற்றும்-விவர்ந்தெரியாதவனைப் போலவே ஒவ் வொரு நல்ல தமிழ்ச் சொல்லையும் நமத்துப் போகச்செய்து, உரசி எரிபவர்களையே இன்று நிறையப் பார்க்க முடிகிறது. சிறுகதையில் புதுமைப்பித்தன், கட்டுரைகளில் தி. ஜ. ர. ஆகியோர் நேரான தெளிவான தமிழ் வாக்கியங்களைTஅழ குற எழுதியுள்ளார்கள். எளிமையே ஓர் அழகு. "காற்று மெல்ல வீசியது. வேப்ப மரத்து இலைகள் சல. சலத்தன-என்று இரண்டு வாக்கியமாக எழுத முடிந்த தையே, - ' ' . 'அந்த வேளையிலே வீசிய காற்று என்னும் தேவனின் கரங்கள் வேப்பமரத்து இலைகளே அசைத்தன”.-என்று அர்த்தமில்லாமல் அர்ைகுறையாக உருவகப்படுத்திக் கெடுக்கிறவர்கள் கூட இருக்கிரு.ர்கள். நெக்லஸில் பதிக்க வேண்டிய வைரக் கற்களைத் தெருச் சுவருக்குப் பதிப்பதுபோல் அணி அலங்காரங்களில் பொருட்.கனிவு ஏற்படாமல் தாறுமாருகப் போட்டுத் தள்ளுவதல்ை வசனமோ, வாக்கியமோ ப்ாதுகாப்பும் அழ கும் பெற முடியாது. - אר