பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கா. பார்த்தசாரதி மொழியின் சொற்களை ஊடுபொருளாகக் கொண்டு இலக் கியம் அமைவதால் அது மற்றெல்லாக் கலைகளிலும் மேம் பட்டதாகிறது. - நுண்கலைகள் ஒரு நாட்டின் வரலாற்றை மாற்றிவிட முடியாது. ஆல்ை இலக்கியம் ஒரு நாட்டின் வரலாற் றையே மாற்றிவிடக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. அறிவிய லைப் போல மூளையை மட்டும் எட்டி இயக்காமல் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் எட்டி இயக்கக் கூடியது இலக்கியம் ஆகும். செய்தித்தாள்கள் ஒரு நாளெல்லைவரை வாழும். சில நூல்கள் சில நாட்கள் அல்லது மாதங்களுக்குரியன. இன்னும் சில நூல்கள் சில ஆண்டுகளுக்கு உரியன. ஆனல் நல்ல இலக்கியங்கள் என்றும் உரியன. காலத்தை எதிர்த்து வாழவல்லன. அவைகளையே சிறந்த இலக்கியங்கள் என அறிஞர் பெருமக்கள் போற்றுவார்கள். கணிதமோ, அறிவியலோ எவர் எழுதினும் எத்துணை முறை எழுதினும் ஒரே விதமான முடிவு தரக்கூடியது. இலக்கியம் அப்படி அன்று. ஒவ்வொருவர் எழுத்துக்கு ஒரு சுவை. ஒவ்வொருவர் எழுத்துக்கு ஒரு பயன், ஒரு முடிவு, ஒரு சுவை எனத் தனித் தனிச் சிறப்புத்தன்மைகளைத் தரக் கூடியது. இலக்கியம் வெவ்வேறு மனநிலைகளில் வெவ்வேறு சுவைகளை எழுப்பக் கூடியது. ஒரே இலக்கியம் ஒருவர் அதனை இளமையில் படிக்கும் போது ஏற்படுத்தும் உணர்ச் சிேயும், சுவையும் வேறு. வளர்ந்தபின் படிக்கும்போது ஏற் படுத்தும் சுவையும், உணர்ச்சியும் வேறு. எனவேதான் மற்ற நுண்கலைகளையும், கவின்கலைகளையும் விட இலக்கியம் நீண்டகாலம் வாழக் கூடிய தகுதியைப் பெறுகிறது. முடிவுரை ஆக இலக்கியமும் கலைகளில் ஒன்று என்ருலும் மற்றெல்லாக் கலைகளையும் விட உயர்ந்தது. நீடித்துவாழ வல்லது. காலந்தோறும் புதிய சுவையும் பயனும் தரக் கூடியது. நுண்கலைகளின் நுணுக்கம் அதற்கும் பொது என்ருலும் நுண்கலைகளைவிட மேம்பாடுடையதாக இலக்கி யம் விளங்குகிறது என்பதனைக் காண்கிருேம்.