பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை கலைக்காகவே 44 யும் தேடும் இந்த முயற்சியினலேயே இலக்கியத்தின் பயளே யும், விளைவையும் நாம் இழந்துவிட நேரிடும். படிக்கும் போது அடையும் நுகர்ச்சியின்பத்தைத் தவிர வேறு சில பொருள்களையும் ஒரு கவிதையோ, கதையோ தன்னகத்தே கொண்டிருந்தாலும் கூட அவற்றைத் தேட முயல்வது இரண்டாந்தரமான இலக்கிய முயற்சியே ஆகும். இப்ப டிக் கூறுவோர் பிராட்லியின் கருத்துக்களைத் தங்கள் கூற் றுக்கு அரணுகக் கூறுவார்கள். - வார்த்தைகளைக் கரையாகக் கட்டி அவற்றில் எல்லைப் படுத்தி வடிக்க இயலாக் கலை இனபத்தைச் சில கவிதை களிலோ, கதைகளிலோ கண்டு அதுபவிக்கலாம். அந்தச் சிறப்பு அதில் இருப்பதைக் காண நேரலாம். ஆளுல் கண்டு பிடிப்பதே முயற்சியாக அலேயக் கூடாது. சிறந்த படைப்பு என்பது அதை நுகரும் போதே தெரிந்து விடும். அப்படித் தெரியும்போது உண்டாகின்ற நுகர்ச்சியின் பத்தை அக்குவேறு ஆணிவேருக அலசிப் பார்க்கக் கூடாது. பார்த்தால் ஆராய்ச்சிதான் மிஞ்சும். அழ குனர்ச்சி போய்விடும். கவிதைகளுக்குப் பொருள் காண் பதும் காணமுயல்வதுமே தவறு என்று கூறுகிறவர்கள் கூட இருக்கிருர்கள். இன்பத்தையும், நுகர்ச்சிப் பயனையும் அடைவதற்காகப் போடப்படுகிற ஏணி என்று கவிதை யைப் பற்றியோ, படைப்பிலக்கியத்தைப் பற்றியோ நினைக்க விட்டுவிடலாகாது. கலையில் இன்பக் கூறுபாடு கள் இருக்கலாம். ஆனல் அவற்றின் இருப்பைத் தேடுவ தும், அலசுவதுமே வலிந்த முயற்சிகள் ஆகும். நீதி போதனை அறவுரை, முதலியவற்றைக் கலை நங்கையின் நாசூக்கான இடை ஒடியும் அளவிற்குக் கனமான சுமை களாக அவள் மேல் ஏற்றுவது தவருகும். சிறந்த படைப்பை-கலைப்படைப்பை-அநுபவிப்பதோடு நிறுத் திக் கொள்ளப் பழக வேண்டும். அதில் பயனைத் தேடித் தவிப்பது தவறு என்றே கூறல்ாம்.' என்று இவ்வாறெல் லாம் கூறப்படும் வாதங்கள் கலை கலைக்காகவே என்ற கருத்தை உறுதிப்படுத்தப் பயன்படுவன.