பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் பிறமொழிக் கலப்பு 85. இலக்கணங்கள் ஆதரிக்கவில்லையாயினும் தமிழில் மூன்று வகையான இருவேறு மொழித்தொகைகள் உண்டு. 1. தெலுங்கு-தமிழ் 2. தெலுங்கு-உருது 3. தெலுங்கு-சம்ஸ்கிருதம் இரளி, உப்பசம், சளிப்பு, கலிங்கம், சொண்டிகத்திரி, கடப்பாரை, ராயசம், தரகரி, சேந்திரவர், கம்பத்தக் காரர், குப்பம், ரெட்டியார், பட்டர், கோமட்டி, ராஜா கரிசை, முதலிய சொற்கள் எல்லாம் தெலுங்கிலிருந்து கடன் பெறப்பட்டன. ஆபரணங்கள், உணவுட் பொருட் கள், ஆடைகள், வேலைக்குப்பயன்படும் கருவிகள், சாதிப் பெயர்கள் ஆகியவற்றுக்கான சொற்களே தெலுங்கிலி ருந்து வந்தன எனத் தெரிகிறது. கன்னடம்: கன்னடத்துக்கும் பழங்காலத்திலிருந்தே தமிழகத்துடனே தொடர்பிருந்தது. சங்க இலக்கியங்களில் வரும் வடுகர் என்னும் சொல் கன்னடர்களைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது. தமிழில் கன்னடச் செல்வாக்குப் பதின்மூன்ரும் நூற்ருண்டில் வலுப்பெற்றது. ஹொய் சளர்கள் சோழர் அரசியலில் தலையிட்டுத் தமிழகத்தில் தங் கள் ஆட்சியை நிலை நாட்டிய காலம் அது. விஜயநகரப் போரசர்களில் சிலர் கன்னடத்தவராயிருந்தனர். அவர் கள் வழியாகவும் கன்னடச் செல்வாக்குப் பெருகியது. பிரி தொரு காரணம் வீர சைவசமயத்தின் செல்வாக்கு. இச் சமயத்தினர் தமிழகத்தில் குடியேறி மடங்களை நிறுவியது ஒரு காரணமாகும். சிவப்பிரகாசரும், சாந்தலிங்கரும் பெரும் வீர சைவப் புலவர்களாவர். மொழிமுதலில் கடை யண்ண வெடிப்பொலியும், அதைத் தொடர்ந்து குறுகிய முன் உயிரும வரும் சொற்களில் கன்னடச் செல்வாக்கைத் தெளிவாகக் காணலாம். இக் கடையண்ண வெடிப்பொவி, தி-6.