பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் பிறமொழிக் கலப்பு 87 யல் பாத்திரங்கள் தொடர்பாகவும், சில சொற்கள் அறிவு உணர்ச்சி தொடர்பாகவும் ஏற்பட்டு இணைந்தன. லாகு கைலாகு கொடுத்தல் என்பதிலுள்ள ஆதரவு என்ற பொரு ளில் வரும் லாகு' மராட்டியச் சொல்லாகும். கோலி' (சிறுவர் விளையாட்டு) சாவடி, கண்டி (ஒர்-எடை சாகி, லாவணி தண்றி, அபங்கம், டோக்ரா முதலிய இசை தொடர்பான சொற்களும் மராத்தியத்திலிருந்து வந்தவை யாகும். 1. இசை தொடர்பானவை 2. உணவு பாத்தி ரத்திலிருந்து வந்தவை என இருபிரிவின மராத்தியச் சொற்கள். உருது பார்ஸி: சில உருது, பார்ஸிச் சொற்களும் தமி ழுக்கு வந்தன. அவை பெரும்பாலும் ஆட்சி-நிர்வாகத் தொடர்பானவை. 1. துமல் முதும்பல், 2. நஜர் நைசர் 3. சராய் 4. கோரி 5. கெடுபிடி 6. கெவு கெழுவு 7. கைதி 8. சப்பரம் 9. சராசரி 10. சிலாமணி படி செலாமணி 11. சாட்டை-சாட்டி 12. சாமான்ஜாமான் 13. சாலேசுரம் 14. சினி 15. சுக்கான் 16. சேடை 17. சீட்டு 18. தயார் / தையார் ராவுத்தர், சலாம், சபாஷ், முதலிய உருது (பாரசீகம்) பார்ஸிச் சொற்கள் செய்யுளிலேயே தமிழில் இடம் பெற் றுள்ளன. இவற்றுள் பெர்லியன் வார்த்தைகளையும் உருது வார்த்தைகளாகவே தமிழர்கள் கருதினர். ஆயிரத் துக்கு மேற்பட்ட பெர்லியன் +உருது + இந்துஸ்தானி சொற்கள் தமிழில் கலந்துள்ளன. மேலைநாட்டு மொழிகள்: 15-ம் நூற்ருண்டு முதல் இந்தியா விற்கு மேல் நாட்டினர் வரத்தொடங்கினர். முதலில் வந்தவர் போர்த்துக்கீசியரே. அவர்கள் கிழக்கிந்தியாவில் ஏற்படுத்திய எல்லாக் குடியிருப்பு (காலனி) களிலும பறங்கி என்ற பெயர் முந்து நிலையாக வழங்கியது. சான்று: பறங்கிப்பேட்டை, பறங்கிமலை பறங்கி' என்ற சொல் Frank என்னும் சொல்லிலிருந்து வந்ததா