பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கஉ soof so மல்லது வாரா என்பதும் பெறப்படும். ஒரு சொல்லைப் பகுத்துச் சிருக்கு ஏற்றவாறு வேறு சீராக ஆக்கிய நிலையிலும் அச்சீர்வகை யால் வேறு சொல்லிலக்கணம் பெறப்படும். "மம்மர் நெஞ்சினன் றொழுதுநின் றதுவே” எனவரும் அடியில் நின்றது என்னுங் குற்றுகர வீற்றுச் சொல்வினைத் தொழுதுநின்றதுவே எனப்பிரித்து வேறொரு சீராக்கியவழி குற்றுகரம் முற்றுகரமாகி உடம்படுமெய்யாகிய வகரம் பெற்று வேறுபடுதல் காண்க. சீரெனப்படுமே” எனச் சிறப்பித்தவதனால் ஈரசைச் சீரும் மூவசைச் சீரும் ஆகிய இவை சிறப்புடைய என்பதும் ஒரசைச்சீர் இவைபோலச் சிறப்பில என்பதும் பெறப்படும். ஈண்டு எனப்படும் (எனச் சிறப்பித்துரைக்கப்படும்) என்பதேபற்றி இத். துணைச் சிறப்பில தாகிய நாலசைச் சீரும் கொள்ளப்படும் என்ற கருத்தால் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள் நாலசைச் சீர் கொண்டனர். அவர்கள் நாலசைச் சீர்க்கு உதாரணமாக உலக வழக்கினுள் காட்டும் உண்ணாநின்றன. முதலிய சொற்கள் இருசொற் றன்மையவாய்ப் பிளவு பட்டு நிற்றலின் அவை ஒரு சீரெனக் கொள்ளப்படாவாதலானும் அவற்றை ஒருசீராகக் கொண்டுவரும் செய்யுள் யாண்டும் இல்லாமையானும் அவர்கள் நாலசைச் சீர் காட்டல்வேண்டி வஞ்சிப்பாவினுள் வந்த நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்’ என்ற ஆசிரிய அடியினை இரு சீரடியாகவுரைப்பினும் அதற்குத் துாங்கலோசை வாராமையானும், வஞ்சிச்சீர் அறுபது காட்டும் நிலையில் நேர்பசை நிரைபசைகள் யாண்டும் அலகு பெறாமையானும் நாலசைச்சீர் கொள்ளுதல் தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று என்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். க.உ. இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர். இளம்பூரணம் : என். எனின், ஈரசைச்சீர் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்) மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கிவந்தன இயற்சீர் எனப்படும் உரியசை மயங்கிவந்தன ஆசிரியவுரிச்சீரெனப்படும் என்றவாறு. 1. நேர், நிரை என்பன இயலசை நேர்பு, திரைபு என்பன உரியசை மயங்குதல்-கலந்து உடன்வருதல் ,