பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் قيمي «*}ټني படும் இவையுமென்பதாம். தளைகொளொக்கும்’ எனவே, ஏழு தளையுள்ளும் இவற்றை ஒன்றொன்றனுள் அடங்கு மென்று அடக்கற்க, என்னை ? இவை வேறுவேறு பட்ட அசையான் வேறு வேறு சீராயினமையினென்பது. அசைச் சீர்க்கு உரிச்சீரிலக்கணமின்மையின் இதற்கு இஃதுதொப்ப வாரா தென்றுணர்க.2 w “நீத்துநீர்ப் பரப்பி னிவந்துசென் மான்றேர்’ என்புழிப் போதுபூவும் விறகுதியும் வந்தவாறு கண்டுகொள்க. இவற்றை ஆசிரியவுரிச்சீர்ப்பின் வைத்ததென்னையெனின், இவை யும் அவைபோல ஈண்டொருங்கியைதல் பெரும்பான்மை யென்பது அறிவித்தற்கென வுணர்க.3 (கரு) நச்சினார்த் திரிையம் : இஃது இயலசை உரியசை மயக்கத்துப் பிறப்பன இரண்டியற் சீருணர்த்திற்று. இ-ள். அவண் நேர்நிற்பின் இயற்சீர்ப்பால எ-து மேனின்ற அதிகாரத்தான் உரியசையிரண்டன் பின்னும் நேரசைவரின் அவையிரண்டும் இயற்சீர்ப்பாலவாம்' எ-று. 1. உரியசையின் பின் நேர்புநேர் (சேற்றுக்கால் போதுபூ) திரைபுநேர் {களிற்றுத்ததாள்-விறகுதி) என நேரசை வரின் அவையிரண்டும் முறையே பாதிரி, கணவிரி என்றாற்போலக் கொள்ளப்படும் என்பதாம். இவ்வாறு கூறவே இவை பாதிரி, கணவிரி என்பனவாக அசைதிரிந்து நிரையீற்றுச் சீர்களாமெனக்கொள்ளுதல் கூடாது. நேர்புநிரை, நிரைபுநிரை யாகிய நிரையீற்றுச் சீர்கள் தளை. கொண்டதுபோல இவையும் தளைகொள்ளப்படும் எனவும், வேறுவேறுபட்ட அசையான் வேறுவேறு சீராயின. இவற்றைத் தளைகோள்ஒக்கும் என்றதே கொண்டு ஏழுதளையுள்ளும் ஒன்றொன்றனுள் அடங்குமென்று அடக்குதல் கூடா தெனவும்விளக்குவர் பேராசிரியர், 2. இயற்சீர்க்கு உரிச்சீரிலக்கண மின்மையின் உரியசைமுன்வரும் இயலசைச். சீர்க்கு இயலசை முன்வரும் இயலசைச்சீர் ஒப்ப வாராது என்பதாம். 3. ஐ.சியசைப்பின் நேர்புணர்ந்து இயற்சீர்ப்பாற்படும் இவ்வீரசைச் சீர்கள், உரியசைமுன் திரைபுணர்ந்து வரும் ஆசிரியவுரிச்சீர்களைப்போன்று இயற்சீரும் ஆசிரியவுரிச்சீருமாக ஒரடிக்கண் ஒருங்கியைந்து வருதல் பெரும்பான்மையென்பது அறிவித்தற்கு, இவற்றை ஆசிரியவுரிச்சீர்ப்பின் வைத்தார் ஆசிரியர். 4. நேர்புநேர், நிாை,நேர் எனவரும் ஈரசைச்சீர்களிரண்டும் முறையே பாதிரி, கணவிரி என்னும் இயற்சீர்ப்பாற்படும் என்பதாம்.