பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీఃశీ: தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இத்துணையுங் கூறப்பட்டது ஈரசைச் சீர் பதினாறினும் இயற்சீர் பத்தும் ஆசிரிய வுரிச்சீர் ஆறுமா மென்றவாறு: இது, மேனின்ற இயற்சீரதிகாரத்தான் ஈரசைச்சீருள் இயலசை உரியசை மயக்கத்துள் ஒழிந்து நின்ற நான்கு இயற் சீரு முனர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இயலசை இரண்டின் பின்னும் உரியசை இரண்டும் ஒன்று இரண்டு செய்து மயங்கி நான்காகுங்கால் அவ்விரண்டு உரி யசையும் இயலசை மயக்கமாகிய இயற்சீர் நான்கனுள் நிரையீற்ற பாதிரியுங் கணவிரியும் போல வருஞ்சீரொடு தட்கும் (எ - று). அவை நேர்நேர்பு நேர்திரைபு நிேரைநேர்பு நிரை நிரைபு எனவரும். வருங்கால் நேர்முதற்சீர் இரண்டும் பாதிரி போலவும் நிரைமுதற்சீர் இரண்டுங் கணவிரிபோலவுங் கொள்ளப்படு மென்றவாறு. எனவே, இச்சூத்திரமுஞ் சீராமாறேயன்றிச் சீர்தளைக்குமாறுங் கூறியவாறாயிற்று. இவற்றைப் போரேறு பூமருது கேடியாறு மேழகளிறு எனினும் இழுக்காது. கசு) நச்சினார்க்கினியம்: இது மேனின்ற இயற்சீரதிகாரத்தான் ஈரசைச்சீருள் உரியசை இயலசை மயக்கத்துள் ஒழிந்துநின்ற நான்கியற் சீரும் உணர்த்திற்று. 1. ஈரசைச்சீர் பதினாறினுள் இயற்சீர்பத்தும் ஆசிரியவுரிச்சீர் ஆறும் ஆகும் என்பது இதுவரை கூறப்பட்டது. 2. ஒழிந்து நின்ற நான்காவன நேர்நேர்பு (போரேறு), நேர்நிரைபு (பூமருது) திரைநேர்பு (கடியாறு), திரை நிரைபு (மழகளிறு) என்பனவாம். 3. நிரையசையியலவென்றது. நேர்முதல் இயலசையும் நிரைமுதல் இயலசையும் நேர்பு, நிரைபு என்னும் உரியசை யிரண்டனோடும் மயங்கிவந்த ஈரசைச்சீர் நான்கனுள் நேர்முதலாகிய போரேறு, பூமருது இரண்டும் நிாையீற்றியற்சீருள் பாதிரிபோலவும் திரைமுதலாகிய கடியாறு, மழகளிறு இரண்டும் நிரையிற்றியற் சீராகிய கணவிரிபோலவும் அமைந்து வருஞ்சீர்களோடு திளைத்து நிற்கும் என்பதாம். 4. இயல்சைமுன் உரியசைவரின் என்னாது, இயலசையீற்றுமுன் உரியசைவரின்' என விரித்துக்கூறினமையால் இச்சூத்திரஞ் சீராமாறேயன்றி நின்றசீரின் ஈற்றசையோடு வருஞ்சீரின் முதலசை வந்து சீர்தளைக்குமாறுங்கூறியவாறாயிற்று στ8άι Φft f,