பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவ ளம் نبيf a{ة (இ-ள்) ஒற்று அளபெடுத்துவரினும் அசை நிலையாகலும் உரித்து என்றவாறு. மாட்டேற்று வகையான் ஆகாமை பெரும்பான்மை.1 உதாரணம் “கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்' (மலைபடு. கூரு உ) என வரும். (கள்) இஃது, ஒற்றளபெடையும் உயிரளபெடைபோலச் சீர்நிலை யாதலேயன்றி அசைநிலையாகலும் உரித்தென மாட்டெறிந்த மையின் எய்தாத தெய்துவித்தது. இதனை அசைப்படுத்து எழுத்துநிலையும் வேண்டுகின்றமையின் வழுவமைத்தது உமாம். (இ-ள்.) ஒற்றளபெடுத்தாலும் உயிரளபெடைபோலச் சீர் நிலையெய்தலும் ஒரசையாய் நிற்றலும் உரித்து (எ-று.) “ஒற்றள பெடுப்பினும்” எனவே, ஒற்றுக்கள் அளபெடுத்து நிற்றற்கு உரியன; உரிய வழி எல்லாம் வரையாது கொள்ளப்படும். அவை வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளும் இருவாற்றான் ஒரு சொற்கு உறுப்பாய்நின்ற ஒற்றே அளபெழினும் பின் தோன்றிக் கொள்ளப்பட்ட ஒற்று அளபெழினுமென இருவகைப்படும். 'அஃதிவ ணுவவா தெழுந்துபுறத் திசைக்கும்” (தொல். எழுத்து. 102) என்பது சொற்குறுப்பாய் நின்றது. 'ஆனா நோயொடு கான லஃதே" (குறுந். 97) என்பது பின்றோன்றிக் கொண்ட புள்ளியெனப்படும். “அற்றென மொழிப’’ என்றதனான் ஒற்றளபெடையும் உயிரளபெடைபோலத் தானுந் தன்னையொற்றிய எழுத்துங்கூடி அளபெடை மொழியாகிச் 1. அற்று-அத்தன்மைத்து மேற்கூறிய உயிரளபெடை போன்று ஒற்றள. பெடையும் அசைநிலையாகலும் (அலகு பெறாமையும்) உரித்து என மாட்டெறிந்து கூறவே அசைநிலையாகாமையே (அலகுபெறுதலே) பெரும்பான்மை யென்பதாம்.