பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி இ-அப் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் இ-ள், வஞ்சிச்சீரென்று கூறுபடுக்கப்பட்டன, மேற்கூறிய வெண்சீரல்லா மூவசைச்சீரெல்லாம். எ-று!. அவை வருமாறு :- நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்கனையும் நிறுத்தி, ஒருகால் நேர்முன்னாகவும், ஒருகால் நிரைமுன்னாகவும், ஒருகால் நேர்பு முன்னாகவும், ஒருகால் நிரைபு முன்னாகவும் எடுத்து நேரீறாக முடிக்கப் பதினாறாம்; அவ்வாறெடுத்து நிரையீறாக முடிக்கப் பதினாறாம்; அவ்வாறெடுத்து நேர்பீறாக முடிக்கப் பதினாறாம்; அவ்வாறெடுத்து நிரைபீறாக முடிக்கப் பதினாறாம்; ஆகவே, அறுபத்து நான்காயிற்று. அவ்வாறெடுத்து நான்கு முறைமைக்கு நடுவு நேரும் நிரையும் நேர்பும் நிரைபுமாக நிற்குமாறும் உணர்க. அவை : -- உதாரணம் நேர்நேர்நேர் மாசேர் வாய் நேர்நிரைநேர் மாவருவாய் நேர்நேர்புநேர் மாபோகுவாய் நேர்நிரைபுநேர் மாவழங்குவாய் திரைநேர்நேர் புலிசேர்வாய் நிரைநிரைநேர் புலிவருவாய் நிரைநேர்புநேர் புலிபோகுவாய் நிரைநிரைபுநேர் புவிவழங்குவாய் நேர்புநேர்நேர் பாம்புசேர்வாய் நேர்புநிரைநேர் பாம்புவருவாய் நேர்புநேர்புநேர் பாம்புபோகுவாய் நேர்புநீரைபுநேர் பாம்புவழங்குவாய் நிரைபுநேர்நேர் களிறுசேர்வாய் நிரைபுநிரைநேர் களிறுவருவாய் நிரைபுநேர்புநேர் களிறுபோகுவாய் நிரைபுதிரைபுநேர் களிறுவழங்குவாய் எனவும் நேரீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன. வெண்சீரென மேற்காட்டிய நான்கு மொழித் தொழிந்த பன்னிரண்டும் வஞ்சியுரிச்சீர். -: நேரீற்று மூவசைச்சீர் நான்கும் அல்லாத ஏனைய அறுபது மூவசைச் சீர்களும் வஞ்சிச் சீர் என வகைப்படுத்தப்பெற்றன என்பதாம்.