பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உ.உ ளஙங

றான். எனவே, நீடுகொடி குளிறுபுவி என்னும் இரண்டாசிரிய வுரிச்சீரும் ஆசிரியத்து வந்து அடியுறழுமென்பது ஈண்டுக் கொள்ளப்படும் 1 அல்லது,

'முன்னிரை யுறினு மன்ன வாகும்' (தொல்-செய். 14)

என்ற மாட்டேற்றான் இயற்சீர்த்தன்மை சிறுபான்மை வகை யான் எய்துவித்தது உம் இப்பயனோக்கியாயிற்று. இக்கருத்து நோக்கிப் போலுங்,

கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (தொல்-செய். 24)

என்ற உம்மை இறந்தது தழி இயிற்றுமா மென்பது.2

இனி ஒருசாரார் வெண்சீரும் ஆசிரியப்பாவினுள் வருங் கால் இயற்சீரிடையிட்டன்றி உடனியைந்துவாரா என்ப. அங் ங்னங் கொள்ளிற் கட்டளையடிக்கண்ணும் ஆசிரியவடியுள் வெண் சீரும் வந்து உறழப்பெறு மென்றானாம். அல்லாத வடிக்காயின் அது போக்கி,

'இன்சீ ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையார் ஆசிரிய வடிக்கே’ (தொல்-செய் 30)

என்புழிக் கூறப்படுமென்பது ஈண்டு நேரடிக்கென்பது கட்டளை யடிக்கென்றவாறு.3 (உங்.)


1. வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஒருங்கு நிலையில என்றது, கட்டளை யாசிரியப்பாவினுள் இயலசை மயங்கிய இயற்சீராகிய தன் சீரேபோல, வெண்பா அரிச்சீரும் உரியசைமயக்கமாகிய ஆசிரியவுரிச்சீரும் ஒப்பவரும் நிலையில என்றவாறாம். எனவே உரியசையும் இயலசையும் கூடிய ஈரசைச்சீர்களுள் நிரையீற்றுச் சீர்களாகிய நீடுகொடி, குளிறுபுலி என்னும் ஆசிரியவுரிச்சீரிரண்டும் ஆசிரியத்துள் வந்து அடியுறழும் என்பது ஈண்டுக்கொள்ளப்படும் என்றார் பேராசிரியர். 2. முன்னிரையுறினும் அன்னவாகும் என்னும் மாட்டேறு உரியசையும் இயலசையும் மயங்கிவந்த நீடுகொடி, குளிறுபுவி என்னும் அவ்வீரசைச்சீர்க்குச்சிறு பான்மை இயற்சீர்த்தன்மை எய்துவித்ததென்பதும், நிரையீற்றாசிரியவுரிச்சீராகிய இவ்விரண்டும் ஆசிரியத்து வருதலேயன்றிக் கலிப்பாவிலும் விலக்கப்படா என்னுங் கருத்து நோக்கிப் போலும் 'கலித்தளை மருங்கிற்கடியவும் படாஅ எனப் பின் வருஞ் சூத்திரத்து ஆசிரியர் கூறியுள்ளார் என்பதும் கலித்தளை மருங்கினும் கடியப் படாஅ' என அவ்வும்மையை இறந்ததுதpஇய எச்சவும்மையாகக் கொள்ளினும் பொருந்துமென்பதும் பேராசிரியர் தரும் விளக்கமாகும். 3. வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஆசிரியப்பாவினுள் வருமிடத்து இயற்சீரிடையிட்டன்றி உடனியைந்துவாரா என இச்சூத்திரத்துக்குப் பொருள் கொள்வர் ஒருசாராசிரியர். அவ்வாறு கொள்ளின் ஈண்டு இன்பாநேரடி' என்றது