பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உங் செங் ரு யுடைய எனவும் கொள்ள வைத்தாராயிற்று. இனி, இச்சூத்திரத்தில் இன்டா நேரடி யென்றது, ஆசிரிய அடியாகிய கட்டளையடியினையெனவும் வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் கட்டளை யாசிரியப்பாவில் வரும் நாற்சீரடிக்குப் பொருந்தி நிற்றல் இல்லை’ என்பதே இச்சூத்திரத்தின் பொருள் எனவும் கொள்வர் போராசிரியரும் நச்சினார்க்கினியரும். ஆசிரியர் தொல்காப்பியனார் இச்சூத்திரத்தால் உணர்த்தக் கருதிய பொருள் இதுவென்பது மேலும் ஆராய்தற்குரியதாகும். உங். கலித்தளை மருங்கிற் கடியவும் பெறாஅ.1 இஎம்பூரணம் : என் - எனின். கலிப்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் துதலிற்று. (இ - ள்.) கலித்தளை வரும்வழி மேற் சொல்லப்பட்ட இரு வகைச்சீரு மொருங்கு நிற்கவும் பெறும் என்றவாறு.2 (உ.க ) இது, கலிப்பாவிற் சீர்மயங்குமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ ன்) மேல் ஆசிரியவடி யுறழ்தற்கண் விலக்கப்படாத நிரையீற்றாசிரியவுரிச்சீர் இரண்டுங் கலிப்பாவின் அடங்குங்காற் கடிதலுமுடையகொல்லெனின் ஈண்டும் அவை விலக்கப்படா (எ-று) எனவே, நிரையீற்றாசிரியவுரிச்சீர் இரண்டும் கலியடியுறழ் வனவாயின. கடியவும்படா வென்பது இறந்ததுதழிஇய எச்ச வும்மை; ஆசிரியத்திற் கடியப்படாவாதலேயன்றி ஈண்டுக் கடித லும் படாவென்றமையின். கலித்தளை மருங்கின்’ என்பது வினை செய்யிடத்துக்கண் ஏழாவது வந்தது; தளைத்தல்” என்பது சீர்த்தொழிலாகலின். அல்லாக்கல் இருசீரானாகியதொரு தளையிடனாகப் பிறிதொருசீர் ஆண்டு வரல்வேண்டு 1. கடியவும் படா என்பது பேராசிரியருரையிற் க்ண்ட பாடம். 2 . வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் கலித்தளையடியில் அடுத்தடுத்து ஒருங்குநிற்கவும் பெறும் என்பதாம். 3. ஆசிரியத்திற் கடியப்படாவாதலேயன்றிக் கவித்தளை மருங்கில் ஈண்டுக் கடிதலும் படாஅ என்றமையின் கடியவும்படாஅ என்புழி உம்மை இறந்தது. தpஇய எச்சவும்மை.