பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க.க. ைஎரு சீரடியே சிறப்புடைத் தென்பது பெற்றாம். இன்னும் அதன் சிறப்புடைமையையே கூறுகின்றான்.2 ( ச) நச்சினார்த்திரிையம் : இது கட்டளைப்பாட்டிற்குந் தொடைக்கும் ஒர் கருவி கூறுகின்றது. (இ-ள் ) அறுநூற்றிருபத்தைந் தடியுள்ளும் ஒரடி நின்றாங்கு வருகின்ற அடியும் முன்னின்றவடியை இறந்து வருதலில்லை என்று சொல்லுவர் ஆசிரியர். எ - று. என்றது, முற்கூறிய தளைவகையேயன்றி, அடியோடு அடிக் கூட்டத்துத் தளை கொள்ளுங்காலும் வந்தவடியே வரவேண்டு மென்பது உம், தொடை கொள்ளுங்காலும் வந்தவடியே வர வேண்டுமென்பது உம் கூறியதாயிற்று; எனவே, தேமா தேமா தேமா தேமா என்னும் அடிக்கட் டொடைகொள்ளுங்கால் “வாமா னேறி வந்தோன் மன்ற” என வந்த அடியே வரல் வேண்டுமென்பது உம், 'தேமாஞ் சோலைத் தீந்தே னு,ண்ட காமர் தும்பி யாகல் கண்டது” எனத் தளை வழுவாகித் தொடைப்பகுதியுட் படாதென்பது உம் கூறியவாறாயிற்று. இனி வெண்டாவினுள் 'சென்றே யெறிய வொருகால் சிறுவரை நின்றே யெறிய பறையினை நன்றேகாண்' (நாலடி-34) எனப் பன்னிரண்டெழுத்தடியொன்றனையும் இருகாற் சொல்வி எதுகை கொள்ளுங்கால் அடியோ டடிக்கூட்டத்துத் தளைவகை 1. தம்மின் மாறுபடாது ஒத்த இரண்டடிக்கண்ணேயே தொடைகொள்ளப் படும் என்பதும், அங்ங்ணங்கொள்ளுங்கால் பின்னர் வகுத்துரைக்கப்படும் அறுநூற்றிருபத்தைந்தடியுள் ஒரடியினை இருமுறைவைத்து அவற்றிடையே தொடைகொள்ளப்படும் என்பதும், அங்ங்ணம் தொடுக்குமிடத்து அடியொடு அடிகூடும் நிலைமைக்கண் தளைவகை சிதையாதிருத்தல் வேண்டும் என்பதும் இச்சூத்திரத்தால் உணர்த்தப்பெற்றன. தளையொடு தொடை வகுத்தற்குச் சிறந்தது நாற்சீரடியே என்பது இவற்றாற் புலனாம். 2. இன்னும். மேலும்; அடுத்த சூத்திரத்தும். அதன் சிறப்புடைமையே கூறுகின்றான்-அந்நாற்சீரடியின் சிறப்பினையே வற்புறுத்திக் கூறுகின்றார் - 3. அடியோடடிக் கூட்டத்து' என்பதே பாடம் (இராகவையங்கார் பதிப்பு) ‘அடியோடடித்துக் கூட்டத்து' எனக் கழகப் பதிப்பிலுள்ளது பிழை,