பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சம் 综T<穷登 எனவே, இருபதெழுத்தின் மிக்க நாற்சீரடி யில்லை யென்ற வாறாம், வஞ்சிச்சீர் முச்சீரடியின்கண் வருதலின்..! (PO) Gt , y m estrfti sub : இது, மேலெழுத்தெண்ணி அடிவகுக்கப்பட்ட ஐவகை யடிக்குஞ் சீரும் எழுத்தெண்ணியே வகுக்கின்றது. (இ-ள்.) சீரது நிலைமைதான் ஐந்தெழுத்து இறந்து வாராது (எ-று.) பெருமைக்கெல்லைகூறி வரையறுக்கவே சிறுமைக்கெல்லை வரையறைப்படாது ஒன்று முதலாக வருமென்பதாம். சீர்நிலை தானேயென்பது பிரிநிலையேகாரம். அதனை அசைநிலையிற் பிரித்துக் கூறியவாறு. அதனை அவ்வாறு பிரித்துக்கூறவே அசை சீராயவழி ஐந்தெழுத்திறவாமை அவற்றுக்கில்லையென் பது கொள்ளப்படும். அஃதேல் அவற்றுக்கெல்லை கூறானோ வெனின் அவை மூன்றெழுத்தி னிறவாதென்பது உரையிற் கொள்க2. தானென்பதனை இலேசுப்படுத்துக் கொள்ளினும் அமையும். மற்றிவற்றையுஞ் சீர்நிலைபெறுமென்ப வாதலாற் சீரென அடக்கானோவெனின், அடக்கானன்றே, அவை சீர்நிலை யெய்தியவழியும் அசையிரண்டாகாமையினென்பது. 'தளைவகை சிதையாத் தன்மை யான’ (தொல். செய் 28.) என்று ஆண்டு வரைந்தமையின் அதனை ச் சீர்நிலையென வாளாது பொதுவகையா னோதான். அதுவே கருத்தாயின், அவற்றை நேர்பசை நிரைபசையெனக் கூறியதனானும், அவற்றை 'ஈரசை கொண்டு மூவசை புணர்ந்துஞ் சிரியைந் திற்றது சீரெனப் படுமே” (தொல். செய். 12) என்றதனானும் பயந்ததென்னையென மறுக்க. அல்ல 1. சீர்நிலைதானே ஐந்தெழுத்திறவாது என்றமையான் நாலைந்து இருபதெழுத்தின் மிக்க நாற்சீரடியில்லையென்பதும், நிரையிற்று வஞ்சிச்சீரான் இயன்ற சிந்தடியாயின் மூவாறு பதினெட்டெழுத்தின் மிக்கு வருதல் இல்லையென்பதும் நன்கு பெறப்படும். 2. சீர்நிலைதானே' என்புழி ஏகாரம் அசைநிலையிற் பிரிக்கும் பிரிநிலை யேகாரமாதலின், ஐந்தெழுத்திறவாது என்னும் வரையறை அசைநிலைக்கில்லை என்பது கொள்ளப்படும். அசைநிலை முன்றெழுத்தின் இறவாது என்பது உரையிற் கோடலாற் கொள்ளப்படும்,