பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சக #f5) 67 'மாவருவாய், புவிவருவாய்' என்பவற்றையும் “ஞாயிறுகொல், வலியதுகொல்' எனக் குற்றுகரம்பெய்து இருநிலைமை கொள்ளாமோ வெனிற், கொள்ளாம். அவை, 'எல்லா விறுதியு முகர நிறையும் (தொல், எழுத். குற்றி. 3) என்பதனான் முற்றுகரமேயாமென்பது இனி, முதற்கணின்ற குற்றுகரமுங்கொண்டு இருநிலைமை கொள்ளாம்; என்னை ? நுந்தையென்பது ஈரசையாகலானும் அதனை நீநுந்தை யென வேறோர் சொற்பெய்து வெண்சீரெனக் காட்டின், அது வந்து நின்றது என்றதுபோலச் சீர்வகையான் வேறோர் சொல்லா மாகவே அது முற்றுகரமாகலானுமென விடுக்க, என்றார்க்குப் போதுபூ என்பது உம் இருநிலைமைத்தாகாதாம் பிறவெனின், அற்றன்று : சேற்றுக்கால், யாட்டுத்தாள், வட்டுப்போர்' எனப் பலவும் வருமாகலின் அஃது இருநிலைமைத்தேயா மென்பது.2 இனி, வஞ்சியுரிச்சீர்க்கும் இடைநின்ற குற்றுகரங்களை வன்றொடராக வருவித்துக்கொள்க. இனிச், சீரிறுதிக் குற்று கரங்கள் நிறையாது நிற்றலும் உடையவென்பது, "சீரியைந் திற்றது சீரெனப் படுமே (தொல். செய், 12.) என்றவழிக் கூறியவாற்றானறிக 3 1. ஞாயிறுகொல், வலியதுகொல் என்புழிக் குற்றுகரங்கள் எல்லாவிறுதியும் உகரம் நிறையும்’ (தொல், எழுத்து-குற்றி.3) என்ற விதிப்படி முற்றுகரமேயாய் நின்றனவாதலால் அவற்றைக் குற்றுகரமாகக்கொண்டு எழுத்தெண்ணுதலும் எண்ணாமையுமாகிய இருநிலைமையுமுடையவெனக் கொள்ளுதற்கில்லை, 2. போதுபூ என்பது, சேற்றுக்கால், யாட்டுத்தாள், வட்டுப்போர் என வருமொழி வல்லெழுத்து இரட்டித்து வருமிடம் பலவாதலின் அஃது எழுத்து. வகையால் இருநிலைமைப்படுமியல்பினதேயாகும், 3. இனிச் சீரிறுதிக்குற்றுகரங்கள் நிறையாது நின்று எழுத்தெண்ணப்படாமையும் உடைய என்பது, பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து' என்றவழி, நேர்பசைச்சீர்கள் குற்றியலுகரம் விலக்கி ஒரெழுத்துச் சீர்களாகக் கொள்ளப்படுதலாற் புலனாம்.