பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫_爱宵守° தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் ஈருக ரத்தான் ஈரிரண் டாகிப் பாதிரி கணவிரி போலத் தட்கும்’ என உரிச்சீர்கள் இருநிலைமை எய்தின. “வண்டு மின்னும் வரகு மரவுமெனக் கண்டவீ ருகர வசைச்சீர் நான்குந் தேமா புளிமா வாகித் தட்கும்’ என அசைச்சீரும் இருநிலைமை எய்தின. வெண்சீர் நான்கும் ஒருநிலைமையவேயாம். "வெண்சீர் நான்குத் தம்முற் றாம்வந்து தட்ட வெண்டளை கட்டளைக் காகா சீர்வகை யான்வ ருங் கலிக்கும் வெள்ளைக்கும் ஆகு மென்ப வறிந்திசி னோரே' “வெண்சீர் தம்முண் மாறாங் கலித்தளை கட்டளைக் கலிக்கென் றொட்டிய தாகும் அதனோ டியற்சீர் ஒன்றி வரினது கட்டளை வெள்ளைக் காகு மென்ப" "இயற்சி ரசைச்சீ ருரிச்சீர்வெண் சீரென மயக்கற வகுத்த சீர்க ளெல்லாம் ஒன்றுதலை யிட்ட வொருமுப் பஃதே' -ஆக நால்வகைச்சீரும் முப்பத்தொன்று. இனி வஞ்சியுரிச்சீர் பலநிலைமைப்படுமாறு - குறளடி முதலா' (ருள்) என்னுஞ் சூத்திரத்துட் காட்டுதும். ஆய்வுரை : இது, சீர்களுக்குரியதோர் பொதுவிலக்கணம் கூறுகின்றது. (இ-ஸ்) மேல் நாலெழுத்துமுதல் இருபதெழுத்தளவும் வகுத்துரைக்கப்பட்ட பதினேழ்நிலத்தனவாகிய ஐவகையடிகளும் ஒரடிக்கோரடி எழுத்தளவு குறைந்தும் மிகுந்தும் வருவன வாயினும் அவ்வடிகளில் அமைந்த சீரது நிலை ஒசைவகையாற் குறைதலும் மிகுதலும் இல்லை என்பர் ஆசிரியர் எ-று. எஞ்சுதல்-குறைதல்; மிகுதல்-ஓசை நீளுதல்.