பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&_6H Hr தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஒருவாற்றான் உயிர்க்குந்திற முடையவாயினும் அவ்வுயிர்க்குந் திறம் ஈண்டுச் செய்யுட்பாற் படுங்கால் உபகாரப்பட இயங்கு மாறிலவாகலின் எண்ணப்படா (எ . று.) மேற் சீர்களை இருநிலைமைப்படுத்த அதிகாரத்தான் ஒற்றொடு குற்றுகரமுமே ஈண்டு விலக்கினானென்பது இச் சூத்திரம் வலித்ததாயிற்று; 'ஒற்றெழுத் தியற்றே குற்றிய விகரம்’ (தொல்-செய்-8) என மேற்கூறினானாதலினென்பது. பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து’ என ஒற்றுங் குற்றுகரமும் ஒழித்து எண்ணப்பட்டமையினால் எழுத்தடியாயிற்று.2 பிறவும் அன்ன. (சச) நச்சினார்க்கினியம் : இஃது எய்தியது விலக்கிற்று. இ-ஸ். உயிரில் .....படாஅ எ-து ஒற்றும் ஆய்தமுங் குற்றுகரமும் எழுத்தெனப் பெயர் கூறினாரேனும் எழுத்தாக எண்ணப்படா; என்னை? உயிர் ... ... யான எ-து அவை தத்தம் ஒசை இனிது விளங்க ஒலித்தற்குக் கூறிய எண்வகை நிலத்திலும் விளங்க இயங்காமையின். எறு. என்றது, எழுத்தெண்னுமிடத்து அவை ஒழித்தெண்னுக என்றவாறு. இது கட்டளையடிக்கு. பேர்ந்து சென்று என்பதனுள் அவையொழித்து: எண்ணப்பட்டது. பின்னுள்ளோர் கொண்ட கட்டளைக் கலித்துறை சந்தத் தாண்டகங்கட்கும் இவ்வாறு எழுத்தெண்ணுதல் வேண்டுமென்றுணர்க. ஆய்வுரை : இது மேற்குறித்த கட்டளையடிகளில் எழுத்தென எண்ணப்படாதன. இவை யென்கின்றது, 1. இவை ஒருவாற்றான் நாப் புடைபெயரும் அளவு மொழிசார்ந்து உயிர்க்குந்திற முடையவாயினும் இங்குச் செய்யுளிற்படுத்து இசைக்குங்கால் அவ்வொலியின் விரிந்த இயக்கம் இன்மையான் எழுத்தெனத் தனித்து எண்ணப் படாவாயி ைஎன்பதாம் . 2. எழுத்தடி' என்றது, எழுத்தே சீராம் நிலையில் இயன்ற அடி. 3. ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் ஆகியவற்றை நீக்கி,