பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3®_ čłï <.9ł தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் (இ~ள்) குறளடியே வரையறையுடைய வஞ்சியடி யெனப் படுவது (எ-று.) ஏகாரம் பிரிநிலை; என்னை ? சிறப்புடை வஞ்சியடியைப் பிரித்து வாங்கிக் கொண்டமையின். எனவே, மூச்சீரான் வரும் வஞ்சியடியும் உள; அவை கட்டளையடியல்லவென்றா னாயிற்று. இங்ங்ணம் கூறவே, வஞ்சியடியும் ஒருவாற்றான் உறழ்ந்து கொள்ள வழிகாட்டியவாறு. இவ்வாறு கூறாக்கால் மூன்று பாவிற்குங்கூறினான் இதற்குக் கூறியதிலனெனக் குன்றக் கூற (663) லென்னுங் குற்றமாமென்பது; இதனை மேல், "குறளடி முதலா வளவடி காறும் உறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப’ (தொல்-செய்-57) என உறழ்நிலை ஒருவாற்றானே கூறுமென்பது. அச்சூத்திரத் தான். முச்சீரும் உறழ்பவென்று கொள்பவெனின், அஃதே கருத்தாயின் இருசீரும் முச்சீரும் வஞ்சிக்கென்பவென்று உடனோதுவான்மன் ஆசிரியனென மறுக்க.5 (சரு) 1. இருசீரடிவஞ்சி, முச்சீரடிவஞ்சி என்னும் இருவகை வஞ்சியடிகளுள் இரு சீரடி வஞ்சியினையே பிரித்துவாங்கிக் கூறுதலால் வஞ்சியடியே' என்புழி ஏகாரம் பிரிநிலை யேகாரமாகும். 2. ஆகவே முச்சீரால் வரும் வஞ்சியடி கட்டளையடியல்ல என்பது ஆசிரியர் கருத்தென்பது புலனாம். 3. இவ்வாறு கூறவே நாற்சீரடிகளை எழுத்தெண்ணியுறழுமாறுபோலவே இருசீரடி வஞ்சிப்பாவின் அடிகளையும் ஒருவாற்றான் எழுத்தெண்ணி அடியுறழ்ந்து கொள்ள வழிகாட்டினாராயிற்று. 4. இங்ங்ணம் கூறாக்கால் ஆசிரியம் வெண்பா கலி என்னும் மூன்றுபாவிற்கும் கட்டளையடி வகுத்த தொல்காப்பியனார் வஞ்சிப்பாவிற்குக் கட்டளையடி வகுத்துக்கூறாது விட்டார் என்ற குற்றந் தங்கும். ஆகவே குறளடி முதலா அளவடி காறும், உறழ்நிலை யிலவே வஞ்சிக்கென்ப” (செய். 57) எனவரும் சூத்திரத்தால் வஞ்சிப்பாவிற்குக் கட்டளையடி யுறழும் முறையினைப் பின்னர் ஒருவாற்றால் கூறுவர் ஆசிரியர். 5. வஞ்சிப்பாவின் முச்சீரடிகளையும் கட்டளையடிகளாக வைத்து உறழ்தல் தொல்காப்பியனார் கருத்தாயிருக்குமானால் இச்சூத்திரத்தில் இருசீரும் முச்சீரும் உடனோதாது இருசீரடியினை மட்டும் பிரித்துக்கூறமாட்டாராதலின் வஞ்சிப்பா வின் முச்சீரடிகளைக் கட்டளையடிகளாகக் கொண்டு உறழ்ந்துகாட்டுதல் தொல் காப்பியனார் கருத்தன்றென்பது புலனாம்.