பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சகா இ. தி இ. 'உடைத்து’ என்றதனான் இது கட்டளையன்மையும் சான்றோர் செய்யுளுட் பயிலாமையும் பெறுதும். இரண்டனையும் வஞ்சியடி என வரையாது கூறவே இரண்டடியும் மயங்கிவந்த பாட்டை மயக்கடிவஞ்சியெனவும் வேறுவேறு வந்தனவற்றைக் குறளடிவஞ்சி, சிந்தடிவஞ்சியெனவுங் கூறிக்கொள்க. உ-ம். தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ’ (புறம்-ச) எனவும் “நிலைக்கொராஅ விலக்கம் போன்றன." (புறம்-ச) எனவும் குறளடியும் சிந்தடியும் வந்தமையான் இப்பாட்டு மயக்கடிவஞ்சியாம். ஆய்வுரை : இதுவும் வஞ்சிப்பாவுக்குரிய அடியுணர்த்துகின்றது. (இ-ள்) மேற்குறித்த வஞ்சிப்பாவுக்குரிய அடி மூன்று சீராலும் வரும் இடம் உடையது எ-று. அப் இா, அசைகன் ஆகும் அவ்வயின் ஆன. இளம்பூரணம் : என்-எனின். மேற்சொல்லப்பட்ட வஞ்சியடிக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட இருவகையடியினும் அசை கூனாகி வரும் என்றவாறு.2 (சகன்) 1. தோல் , துவைத்தம்பில் துளைதோன்றுவ இது குறளடி. நிலைக் கொராஅ இலக்கம் போன்றன. இது சிந்தடி இவ்விருவகையடிகளும் கலந்து வந்த வஞ்சிப்பா வாதலின் 4-ஆம் புறப் பாடல் மயக்கடி வஞ்சியாயிற்று. 2. அவ்வயினான அசைகூனாகும்’ என இயையும். அவ்வயின் ஆன. வஞ்சிப்பாவுக்குரிய இருசீரடியும் முச்சீரடியும் ஆகிய அவ்விடத்து, கூன் என்பது, பின்வரும் பொருளைச் சுட்டி அடியின்முதற்கண் நிற்கும் சொல்லாகும். மேற் சொல்லப்பட்ட குறள், சிந்து என்னும் இருவகையடியினும் அசைகூணாகி வரும் என்பதாம்.