பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'బ్రీ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் இனி, நூலும் உரையுஞ் செய்தார் நல்விசை யுடையரென்பது, அவற்றை நூலினான் உரையினானென இதற்கு இடை யின்றி வைத்தமையிற் பெறுதுமென்பது. வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனர்' நல்லிசைப் புலவரென்பது, அவற்றை நூலினான் இனி இங்ங்னங் கூறிய நல்லாசிரியரிலக்கணமே கூறியொழிந்தார், எல்லாவற்றானும் எல்லாமமையச் செய்யுஞ் சுவடுடையராகி போயினார் தாமும் என்றவாறு; எனவே, இவ்வுறுப்பமையச் செய்தனவே செய்யுளெனப் படுவனவென்று சிறப்பித்தவாது. அவ்வத்துறை மற்றுக் கூறி யெனவும் உரைத்தன”ரெனவும் இருகாற் சொல்லியதென்னையெனின்,- அச்செய்யுளானே கூறி அவற்றுப் பொருளுரைத்தா ரென்றவாறு; என்றார்க்குச் செய்யுட்குற்றம் ஈண்டோதாரோவெனின், ஒதல்வேண்டுமே? இவ்விலக்கணத்துப் பிறழ்ந்துங் குன்றியும் வருவனவெல்லாம் வழுவென்பதறிய வைத்தானல்லனே, ஆசிரியனென்பது. மற்றுச் செய்யுளுறுப்பு ஈண்டோதினார்; செய்யுள் யாண் டோதுபவெனின், அறியாது கடாயினாய், உறுப்பென்பன உறுப்புடைப் பொருளின் வேறெனப்படா; பொருள் எனப் படுவன உறுப்பே, அவற்ற தீட்டத்தினை முதலென வழங்குப வாகலான் உறுப்பினையே சொல்லியொழிந்தார்; முதற்பொருள திலக்கணமென உறுப்பிலக்கணத்தினையே வேறுபடுத்துக் கூறலாவதின்மையானும் உறுப்புரைப்பவே அவ்வுறுப்புடைய .*.*.*.*.* பொருள் வழக்கியலாற் பெறலாமாகலானுமென்பது. 2 1 , இங்ங்னங்கூறிய” எனவரும் இவ்வுரைத்தொடர் வல்லிதிற்கூறி' எனச் சூத்திரத்தில் வினையெச்சமாக அமைந்தாற் போன்று இங்ங்ணங்கூறி’ r என்றிருத்தலே பொருட்பொருத்தமுடையதாகும். 'ஓதல் வேண்டுமே” என்புழி ஏகாரம் உடன்படுதற் குறிப்பின் வந்த தேற்றேகாரமாகும். 'அறியவைத்தா னல்லனே என்பது அறியவைத்தான் அல்லவா என வினாப்பொருளதாய் 'அறியவைத்தான்' எனத் தேற்றப்பொருள் தந்தது. 2. மாத்திரை முதலாகச் சொல்லப்பட்ட உறுப்புக்களின் தொகுதியே செய்யுளாகிய முதற்பொருளாதலின், அதன் உறுப்பிலக்கணமுணர்த்தவே உறுப்புடைய முதலாகிய செய்யுளிலக்கணமும் வழக்கியலாற் புலனாகும் என்பதாம் . ஈட்டம்-தொகுதி.