பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருஉ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் பாட்டுக்களே.1 அவை இக்காலத்துப் பயின்றிலவென்று மற்றையவற்றோடு ஒக்குமெனப்படாவென்பது. அல்லதுாஉம், உலகத்து மக்கட்பிறவி பலவாயினும் நால் வகை வருணமென்ப, அவர் வரையறை யிலக்கணத்தாரா கலினென்பது. இனி, அவருள்ளும் அந்தணரும் வேளாளரும் போல இடையிருவகையோரும் பயின்றிலரென்று சிறப்பில ராகாரென்பது.? இனிக் கடைச்சங்கத்தார் அறுநூற்றிருபத்தைந்தடியும் பயின்றுவரச் செய்யுள் செய்திலராலெனின் கட்டளையடியாற் செய்தவல்லன வேண்டாவென்பதோர் ஆணையுடைமையின. ரல்லர். உடையவரும் இவ்வாசிரியனாற் சிறப்புடைத்தென்று சொல்லப்பட்ட அளவடியாற் செய்யுள் செய்தாரென்பது 3 இனிப் 1. இத்தொல்காப்பியத்தின் முதனுரலாகிய அகத்தியமென்னும்முத்தமிழிலக்கண நூலையியற்றிய அகத்தியனார் செய்த யாழ்நூல் எனப்படும் இசைநூலினுள்ளும் சாதி, உவமத்துரு, திருவிரியிசை என்னும் மூவகையிசைப்பாடல்களுள் எழுத்தெண்ணி அடிவகுக்கப் பெற்ற கட்டளையடிகளால் இயன்ற சிறப்புடையன சாதிப்பாட்டுக்களேயாகும், இசைச் சிறப்புடைய சாதிப் பாடல்கள் இக்காலத்தில் நமக்குக்கிடைக்காமையால் ஏனைய இசைப்பாடல்களோடு அவையும் ஒத்தன என அவற்றின் சிறப்பினைக் குறைத்து எண்ணுதல் கூடாது. அதுபோலவே ஆசிரியர் தொல்காப்பியனார் எழுத்தெண்ணி வகுத்த கட்டளையடிகளால் இயன்ற செய்யுள் இக்காலத்திற் கிடைக்காமைகொண்டு அவற்றின் சிறப்பினைக் குறைத்து எண்ணுதல் கூடாதென்பதாம். கட்டளைப்பாட்டுட்சிறப்புடையன சாதிப் பாட்டுக்களே' என்றிருத்தல் வேண்டும். 2. அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என நால்வகையோருள் அந்தணரும் வேளாளரும் உலகியலில் தனிப்பிரிவினராக எண்ணப்படுதல்போன்று, அரசரும் வணிகரும் தனித் தனிப் பிரிவினராக எண்ணப்பெறும் பயிற்சியின்மைபற்றி இடையிருவகையோராகிய அவர்தம் சிறப்பினைக் குறைத்தெண்ணுதல் கூடாது. எனப் பேராசிரியர் கூறும் எடுத்துக்காட்டு அவர் காலத்தில் நால்வகைவருணப்பாகுபாடுகளுள் இடையிருவகையோராகிய வணிகர் அரசர் என்னும் பாகுபாடு வழக்கிற்குன்றி ஏனை இருவகை வருணப்பாகுபாடுகளே யெரு வழக்கிலிருந்த சமுதாய அமைப்பினைப் புலப்படுத்தல் கூர்ந்துணரத்தகுவதாகும். 3. ஆசிரியர் தொல்காப்பியனார் தம் காலத்திற் பயின்ற கட்டளையடியின் இயல்புணர்த்தியதன்றிப் பின்வருவோரெல்லாரும் கட்டளையடியினாலேயே செய்யுள் செய்தல் வேண்டும் என ஆணை கூறினாரல்லர். எனவே கடைச்சங்கத்கார் அறுநூற்றிருடத்தைந்தடியும் பயின்றுவரச் செய்யுள் செய்திலர். எனினும் "நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (செப் எனத் தொல்காப்பியனாராற் சிறப்புடைத்தென்று சொல்லப்பட்ட அளவடியாற் செய்யுள் செய்துள்ளமை யறியத் தகுவாதகும்.