பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூள அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ârtoo offilirror வருமென்ற கட்டளை வெண்பா வின்றாமென இனி ஆசிரியத்துள் இங்ங்னம் வருமெனவே வெண்வினுள் ஆசிரியவடி முழுவதுரஉந் தன்றளையோடு வாரா சிறிது வருமென்று கொள்க. அது கலிக்கும் பரிபாடற்கும் உறுப்பாய்வரும் வெண்பாக்களில் ஆசிரியத்தளை வருமேனும் அவை வெள்ளைக்கொச்சகமாமாறுமுணர்க. இஃ. . ஆசிரியப்பாவின்கண் வெண்பாவடி மயங்குமாறு கறுகின்றது. (இ-ள்) இயற்சீர் வெண்டளையாலாகிய வெண்பாவடி ஆசிரியப்பாவின்கண் நிற்றற்குரிய மரபினால் நிற்பனவும் உள எ-று. நிற்றற்குரிய மரபாவது, முதற்கண் வந்த இயற்சீர் வெள்ளடி பின்வரும் ஆசிரியவடியுடன் ஒசையொத்து இயைந்து நிற்கும் முறைமை, நிற்கவும் என்ற உம்மையால் சிறுபான்மை வஞ்சியடியும் கலியடியும் மயங்கி வருதலும் கொள்ளப்படும். சும் வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப. இளம்பூரணம் : என்-எனின். இதுவும் ஆசிரியப்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்) இயற்சீர் வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும் ஐஞ்சீரடியும் ஆசிரியப்பாவின்கண் வருவன உள என்றவாறு. 1. இயற்சீரான் இயன்ற வெண்பா அடி ஆசிரியத்தின்கண் முழுவதும் வந்தமைக்கே பேராசிரியர் கொலைநவில் வேட்டுவன்’ என்ற பாடலை மேற்கோளாகக் காட்டியுள்ளார். இப்பாடல் அகவலோசைத்தாய் வந்துள்ளதென்பது இப்பாடலைச் செவிகருவியாக ஒர்த்துணர்வார் எல்லார்க்கும் ஒப்பமுடிந்த முடிபேயாகும். இயற்சீர் வெள்ளடிகள் விரவிய நிலையிலும் அகவலோசை பிறக்கும் என்பதே இச்சூத்திரத்தின் கருத்தாகும். இதனை அகவலோசை பிறக்குமென்று கொள்ளின் இயற்சீர் வெண்டளையான் வருமென்ற கட்டளைவெண்பா இன்றாமென மறுக்க' எனவரும் இவ்வுரைத்தொடர் பிற்காலத்தில் ஏடெழுதினோரால் இடையிற் சேர்க்கப்பெற்றிருத்தல் கூடுமோ என ஐயுறவேண்டியுளது.