பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

飆.委惠、 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஈண்டுத் தளையென்றது அப் பாக்களை. வெண்டளை. யெனவே இரண்டு வெண்டளையும் அடங்கலின் அவற்றுள் வெண்சீர் வெண்டளையான் வருஞ் சீர்வகை வெண்பாவுஞ் சீர்வகைக்கலியும் அடங்கிற்று. இனி நிரைமுதல் வெண்சீர்’ (சும்) என்னுஞ் சூத்திரம் இதற்கதிகாரமாதலின் கட்டளைக் கலிக்கும் ஐஞ்சீரடி கொள்க. தளையென்றதனாற் கட்டளை. வெண்பாவிற்குங் கொள்க. அடியும் என்ற உம்மையான் வெண்பாவினுண் மிகவுஞ் சிறுபான்மை வருதல் கொள்க. உளவென்றதனாற் கலிப்பாவினுள்ளும் அதற்குறுப்பாய் வரும் பாக்களுள்ளும் பெரும்பான்மை வருதலும் ஆசிரியத்துள் அடுக்கி வருதலும் கொள்க. உ. ம். கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க வொண்செங் குருதியு ளோஒ கிடப்பதேகெண்டிக் கெழுதகை யில்லேன் கிடந்துாடப் பன்னா ளழுதகண் ணிர்துடைத்த கை’ எனவும் "கிடங்கிற் கிடங்கிற் கிடந்த கயலைத் தடங்கட் டடங்கட் டளிரியல் கொள்ளாள் கிடங்கில் வளையாற் பொலிந்தகை வையெயிற்றுச் செவ்வா யிளையாடன் கண்ணொக்கு மென்று' எனவும் இவற்றுள் இரண்டாமடி ஐஞ்சீரடி வந்தவாறு காண்க. அரவணிந்த கொடிவெய்யோ னகம்புக்கா னரசவையன் றகற்றியே’ எனவும், ‘அணிகிள ரவிர்பொறித் துத்திமா நாகத் தெருத்தேறித் துணியிரும் பனிமுந்நீர்த் தொட்டுழந்து மலைந்தனையே’ எனவும் இவை கலியுள் ஐஞ்சீரடி வந்தன. தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக' (குறிஞ்சிக்கலி - ங்) என்று கலிக்குறுப்பாகிய ஆசிரியத்துள் ஐஞ்சீரடி வந்தது. பிறவுறுப்புக்களிலுங் கலித்தொகையுள் ஐஞ்சீரடி வருமாறு காண்க. 'சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே' (புறம் உகரு) என்பது முதலாக நான்கடி ஆசிரியத்துள் ஐஞ்சீரடுக்கி வந்தன. தன்னின முடித்தல் என்பதனாற் கட்டளை யாசிரியத்திற்கு