பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

犀、户 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ-ள்) அறுசீரடி யாசிரியத்தளையொடு பொருந்தி நடைபெற்று வரூஉம், நேரடிக்கு முன்னாக ஆசிரியப்பாவின்கண் என்றவாறு. ஆசிரியப்பா என்ப ததிகாரத்தான் வந்தது. "சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே’’ (புறம்.உங்ரு) என்பதன்கண் முதலடி நாற்சீரான் வந்தது; இரண்டாமடி ஆசிரியத் தளையொடு பொருந்தி யறுசீரடியாகி வந்தது. 'பொருந்தி' என்றதனான் அத்தளை சில வருதல் கொள்க. ஏனையவை புணருஞ்சீரான் வந்தன. (சுக) பேராசிரியம் : இது, முறையானே அறுசீரடியுங் கலிப்பாவிற்கு உரித்தென்கின்றது. (இ-ன்.) நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடியும் வருதலுமுண்டு. அன்னது வருங்கால் தனக்குரிய வெண்டளையே யன்றி ஆசிரியத்தளையொடும் வழக்குப் பெற்று நடக்குங் கலிப் பாவினுள். (எ - று).1 ‘நெறிபெற்றுவரூஉம்' என்றதனாற் சிறுபான்மை நேரடி இடையிட்டன்றி ஒரு செய்யுள் முழுவது உந் தானே வருதலுங் கொள்க. ஆசிரியத்தளையொடும் என்ற உம்மையாற் கலி தனக்குரிய வெண்டளையான் வருதலும் மயங்கிவருதலும் உரிய வாம். “முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோதம் மூழ்கிப் பேர அன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பேருந் தன்மை மடவார் தளந்துகுத்த வெண்முத்தம் புன்னையரும் பென்னப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே யெம்மூர்' என்பது, மூன்றாம் அடி நேரடியாக முன்னும் பின்னும் அறுசீர் வந்தது. பிறவுமன்ன. 1. நேரடிமுன் அறுசீரடியே ஆசிரியத்தளையொடும் நெறி பெற்று வருஉம்' என இயைத்துப்பொருளுரைப்பர். நேரடி - நாற்சீரடி. முன் என்றது, காலமுன் இடமுன் ஆகிய இரண்டினையும். நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் ஆசிரியத்தளை யொடும் அறுசீரடி வரும் என்பதாம்.