பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்ங்கள் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் இஃது ஈற்றயலடி முச்சீர்த்தாகி வந்த செந்தூக்கியற்றாகி இற்ற வஞ்சிப்பா, பிறவும் அன்ன ஈண்டுத் தனிச்சொல் வேண்டு. மென்று பிற்காலத்து நூல் செய்தாரும் உளர். அது சான்றோர் செய்யுள் எல்ல்ாவற்றோடும் பொருந்தாமையானும், பிற்காலத்தில் செய்த நூல்பற்றி முற்காலத்துச் செய்யுட்கெல்லாம் இலக்கணஞ் சேர்த்துதல் பயமின்றாதலானும் அஃதமையாதென்பது. வஞ்சிப்பாவின் ஈற்றடி வரைந்தோதவே இடையாயின எல்லா அடியும் வரப்பெறுமென்பதாம் 2 நேரிழை மகளி ருணங்குணாக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கணங்குழை (பத்துப்-பட்டி 23 24) என ஆசிரியவடியும் வெண்பாவடியும் இடைவந்தன. (சுஅ) நச்சினார்க்கினியம்: இது வஞ்சிக்குஞ் சிந்தடி வரும் என்கின்றது. (இ.ஸ்.) வஞ்சிப்பாவினிறுதி ஆசிரியப்பாவினிறுதி போன்று இறுக. எறு. ‘செந்துக்கியற்று என்ற மாட்டேற்றானே, ஆசிரியத்திற் கோதிய சீரானுந் தளையானும் ஈற்றயலடி முச்சீரடியாய்வருதலும், இடைக்கண் முச்சீரடி வருதலும் பெறப்பட்டது. உ - ம், "வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வா னத்து வனப்புப் போன்றன தாள், களங்கொளக் கழல்பறைந்தன கொல் லேற்றின் மருப்புப் போன்றன தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ 1. வஞ்சிப்பாவுக்குத் தனிச்சொல்வேண்டுமென்று நூல் செய்தார் அமித சாகரர் முதலியோர். வஞ்சி தனிச் சொற்பெற்று வரும் என்னும் அவ்விதி சான்றோர் செய்யுட்கள் எல்லாவற்றொடும் பொருந்தாமையானும், பிற்காலத்திற் செய்த இலக்கண நூல்பற்றி முற்காலச் செய்யுட்கட்கு இலக்கண அமைதி காணல் பயனற்றதாகலானும் வஞ்சிப்பா தனிச் சொற்பெற்று வரும் எனப் பிற்காலத்தார் கூறிய அவ்விதி முற்கால இலக்கியங்களுக்குப் பொருந்தாதென்பதாம். 2. வஞ்சிப்பாவின் இறுதி ஆசிரியவடியால் முடியும் எனவரையறை கூறவே, வஞ்சிப்பாவின் இடையிலாயின் வரையறையின்றி எல்லாவடிவும் வரப்பெறும் என்பதாம்.