பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அ கூ சி: ; ஆ. என்றானாகவின், அடிமோனையே கொண்டாமென்டது.1 என்றார்க்கு, “வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்’ (நாலடி 39) என்றவழி. அடிதோறும் ஒருசொல்லே வந்து தொடையாயிற் றன்றோவெனின், அஃது இரண்டடிக்கண்ணே வந்ததன்று, செய் யுண்முழுவதும் பயின்றுவந்து சுவைமைப்படாதாகலின் வழி மோனைப்பாற் பட்டடங்கும் என்க.2 இச்சூத்திரத்துக் காட்டப் பட்ட தொடை இரண்டும் மூன்று பாவிற்கும் ஒதிய அறுநூற் றிருபத்தைந்து அடியோடுங்கூட்டித் தொகைசொல்லுமாறு மேலைச்சூத்திரத் துரைக்கப்பட்டது.8 {க உ) இஃது எதுகை கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறிய முதலெழுத்தினையொழித்து இரண்டடிபினும், சீர் முழுதும் ஒன்றினும், இரண்டாமெழுத்தே ஒன்றினும், ஒரடிக்கண் முதலிருசீர்க்கண் இரண்டாமெழுத்து ஒன்றினும், து ஒன்றினும், تمان முதற்சீரினும் மூன்றாஞ்சீரினும் இரண்டாமெழுத் முதற்சீரினும் நான்காஞ்சீரினும் இரண்டாமெழுத்து ஒன்றினும், முதற்சீரொழித்து ஏனைய ஒன்றினும் முதலயற் சீரொழித்து 1. அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை' என ஆசிரியர் ஆடி. மோனையே கொண்டமையால் அடியெதுகையின் வேறாகத் தலையாகெதுகை கொண்டாற்போன்று அடிமோனையின் வேறாகத் தலையாகுமோனையென்றதொருவகையினை யாம் ஏற்றுக் கொள்ளவில்லை; அடிமோனை யொன்றே கொண்டாம் என்றார் பேராசிரியர். 2. வைகலும் வைகல்' என்ற பாடலில் வைகல்' என்ற ஒருசொல்லே செய்யுள் முழுதும் பயின்று வருதல் பொருளுணர்ச்சிக்குச் சுவைதராதாகவின் அப் பாடலிற் பயிலும் மோனை வழிமோனையின்பாற்படும். இரண்டடிக்கண் அமைவதே அடிமோனையெனப்படும். 3. தலையாகெதுகை, அடியெதுகை யெனப்பட்ட எதுகைத் தொடைபிரண்டும் மூன்று பாவிற்கும் ஒதிய 625 அடியோடுங் கூட்டித் தொகைகொள்ளும் முறை முன்னைச் சூத்திரவுரையில் (செய்யுளியல் - கி.2-) வகுத்துரைக்கப் . تقيس بنسالة