பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వీ_ఙ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எனவும் குற்றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரைமிகுத்து விராஅய் நின்றவாறு காண்க. 'குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி' (அகம். A) "பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவு முரைத்தனரே” (கவி. பாலை, 10) எனக் குற்றெழுத்துக்களெல்லாம் இடையினின்ற ஒற்றெழுத்துக் களை மாத்திரை மிகுத்து விராஅய் நின்றவாறு காண்க. இதுவும் எழுத்திற்குத்திரங்களிரண்டும் ஆணைகூறிற்று. இனி எழுத்து முப்பத்துமூன்றனுட் சில எழுத்துக்களை உயிர் என்னும் பெயர்கொடுத்து அவற்றைக் குறிலும், நெடிலும், அளபெடையும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஐகாரக் குறுக்கமும், ஒளகாரக்குறுக்கமும் எனப் பெயர்வேறுபாடு கொடுத்து அதனோடு எட்டாக்கியும், சில எழுத்துக்களை மெய் என்னும் பெயர்கொடுத்து அவற்றை மெல்லினமும், வல்லினமும், இடையினமும், ஆய்தமும், ஒற்றளபெடையும் எனப் பெயர் வேறுபாடு கொடுத்து அதனோடு ஆறாக்கியும், இவையிரண்டுங் கூடியவற்றை உயிர்மெய் என வேறோர் பெயராக்கியும் மேற் கூறியவாறே பதினைந்து பெயரவாய் ஈண்டு நடக்குமென்றதற்கு எழுத்தியல்வகை யென்றார். இவ்வெழுத்தினை எழுத்தினுட்கூறிய சூத்திரங்களோடு மாட்டெறிந்தார். அவை, 'ஒளகார விறுவாய்” (தொல். எழுத், நூன். 8) “அ, இ, உ, எ” (தொல். எழுத். நூன். 3) "ஆ, ஈ, ஊ, ஏ” (தொல். எழுத். நூன். 4) 'நீட்டம் வேண்டின்' (தொல், எழுத். நூன். 6) “அவை தாங் குற்றியலிகரம்’ (தொல். எழுத், நூன். 2) 'ஓரள பாகு மிடனுமா ருண்டே' (தொல், மொழி. 24.) "வல்லெழுத்தென்ப" (தொல். எழுத். 19.) "மெல்லெழுத் தென்ப’ (தொல், எழுத். 20.) "இடையெழுத்தென்ப’ (தொல். எழுத். 21. 'உயிர் மெய்யல்லன’’ (தொல், மொழி. 27) என்பனவாம். அளபெடையிரண்டும் எழுத்தாந்தன்மை மேலே