பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள ருஉக தாம் நுகராநின்று வதியுமெனவே, யாமும் இல்லற நிகழ்த்து தற்கு நுகர்தற்குமேற்ற பொருள்களைக் குறைவறப் பெற்றுப் பின் னின்பநுகர்தல்வேண்டுமென்பது கூறினாளாம். பொங்கரிற் பசி தீர்ந்து துணையொடு வதியும் பறவையுந் தாதையுண்கிறபறவையுங் கலக்கமுறுதற்கஞ்சி மணியொலியை வீக்கிய தேர னென்றதனாற் காதலும் அருளுமுடைமையின் அவற்றின் பிரிவிற்கும் பசிக்கும் இரங்கினானெனக் கூறவே! அவை அவற்கு நின்கண்ணும் பெருகுமென்றாளாம். வதியும் பறவை வண்டுந் தேனு மென்பதுந் தாது.ண்பறவை சுரும்பென்பதும், “எங்குமோடி யிடறுஞ் சுரும்புகாள் வண்டுகாள் மகிழ் தேனினங்காள்” (சிந், குண. ச.உ எனப் பின்னுள்ளோர் கூறியவாற்றாணுமுணர்க இதனாற் சேணிடை வரவை யுணர்த்தும் மணியொலியை வாரொலி. கேட்கும் அணிமைக்கண்ணுங் கேளாயாயினையெனவும் அவ்வாரொலி தாது.ண்பறவை யொலிக்கணடங்குதலின் கேட்கின்றிலை யெனவுங் கூறினாளாயிற்று. வாரொலி நரம்போசை போறவின் பெருவரவாயிற்று. மாண்வினைத்தேரனென்றாள், அவன்றன் கருத்திற்கேற்ப வினை முடித்தமை தோன்ற; எனவே வன். புறைக்கேதுவாயின. தெய்வந்தங்கு மலையாதலிற் றெய்வமண. நாறுங் காந்தளினுடைய போதவிழாநின்ற மலர் போல அவர் புணர்ந்தகாலத்துப் புதுமணநாறும் அரிவையெனவே யவர். பிரிந்து சேய்த்தன்றென வன்புறைக்கேதுவாயிற்று. ஆய்தொடி யென்றது. தோண் மெலிந்துழி அயலார்க்குப்புறமறைத்தல் வேண்டிச் செருகுந்தன்மையன்றி யணிந்த நிலையே கிடக்குந் தொடியென்றவாறாம். இதுவும் பிரிந்து சேய்த்தன்றென்ற வாறதாம். ஈண்டுமாணலமென்றது அவன் பிரிவுணர்த்திய 1. 'முல்லைவைந்துனை என்ற பாடலில் நோக்கு என்னும் உறுப்பு அமைந்திருத்தலைப் பேராசிரியருரை கொண்டு விளக்கும் நச்சினார்க்கினியர் 'பூத்த பொங்கர்த் துணையொடு வதியும் தாதுண் பறவை பேதுறல் அஞ்சி' என்ற தொடரில் பொங்கர்த் துணையொடு வதியும் பறவை, தாதுண்பறவை. என இயைத்து, பொங்கரிற் பசிதீர்ந்து துணையொடு வதியும் பறவையும் தாதையுண்கின்ற பறவையும் கலக்கமுறுதற்கு அஞ்சி மணியை விலக்கிய தேரன் என்றதனால் காதலும் அருளும் உடைமையின் அவற்றின் பிரிவிற்கும் பசிக்கும் இரங்கினான்' என நோக்கின் நுட்பத்தை மேலும் விளக்கியதிறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.