பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளரு குங் ரு கலிப்பாப் பிறந்தது. பண்புற வென்றதனான் ஆசிரியமும் வெண்பாவு மியல்பெனவும் ஒழிந்தனர் விகார மெனவுங்கொள்க. ஏனையென்றதனான் மூன்றுபாவினுந் துள்ளிய கவியோசையும் ஒருவகையான் வெண்பா நடைத்தேயாம், இலக்கணக்கலி யோசையன்றாயினுமென்பது ? ஆய்வுரை 103 இது மேற்கூறிய பாக்களைத்தொகைவகையால் உணர்த்துகின்றது. (இ-ள்) மேல் நால்வகையாக விரிந்த பாவினது பகுதியை உண்மைத் தன்மை நோக்கித் தொகுத்துரைப்பின் (அவை நான்கும்) ஆசிரியப்பா வெண்பா என இரண்டாயடங்கும் என்பர் ஆசிரியர் எ-று. பண்புற என்றதனால், ஆசிரியப்பாவும் வெண்பாவும் இயல்பெனவும், ஒழிந்தன. விகாரமெனவுங் கொள்க’ என்பர் பேராசிரியர். ஆய்வுரை 104 இது, நால்வகைப் பாக்களும் இரண்டாயடங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) ஆசிரியத்தின் நடையினையுடையதாய் அதன்கண் அடங்குவது வஞ்சிப்பா, வெண்பாவின் நடையினையுடையதாய் அதன்கண் அடங்குவது கவிப்பா என்று கூறுவர் ஆசிரியர் հT- նմ. வாரு வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே. இளம்பூரணம் : என்-எனின். வாழ்த்தியற் குரிய பாவாமாறு உணர்த்துதல் துதலிற்று. 1. ஒழிந்தன என்றது, வஞ்சி, கலி என்னும் இரண்டு பாக்களையும். 2. மூன்றுபாவினுந் துள்ளிய கலியோசையும் இலக்கணக் கலியோசை யன்றாயினும் ஒருவகையான் வெண்பா நடைத்தேயாம் என்பது' என இயைத்துப் பொருள் கொள்க.