பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருருஇ. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இது, முறையானே அவையடக்கியலுணர்த்துகின்றது. (இ - ள்) வல்லாதன சொல்லினும் அவற்றை ஆராய்ந்து கொண்மினென. அவையகத்தாரெல்லார்க்கும் வழிபடு கிளவி சொல்லுதல் அவையடக்கு (எ . ). 'வல்லுதலென்பது ஒன்று வல்லனாதல்; ஒருவன் வல்லன. வற்றை வல்லவென்பவாகலான் வல்லாதனவற்றை வல்லா வென்றானென்பது அதற்குச் செய்யுள்; 'திரைத்த விரிக்கிற் றிரைப்பினா வாய்போ லுரைத்த அரைபோகக் கேட்டு - முரைத்த பயன்றவா செய்வார் சிலரேதந் நெஞ்சத் தியன்றவா செய்வார் பலர்' இது, பூதத்தகங் அவையடக்கு அரில்தபத் தெரியின்’ என்றதனானே யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடைய கொச்சகவொருபோகினும் அவையடக்கியல் சிறுபான்மை தொடர்நிலைக் கண் வருமெனக் கொள்க.3 {க க.க.) முன் பக்கத் தொடர்ச்சி மொழிந்தது. வழிமொழிதல் பணிவினைப்புலப்படுத்தும் மொழியால் தாழ்ந்து கூறுதல். உயர்ந்தோர் ஒத்தோர், தாழ்ந்தோர் ஆகிய எத்திறத்தாரையும் தன்பனிமொழியாற் பிணித்துத் தான் கூறுவதனை விரும்பிக்கேட்கும்முறையில் அவையிலுள்ளார் அனைவரையும் தன்சொல்வழி அடக்கிக்கொள்ளும் முறையிற் கூறப்பெறுவதே அவையடக்கமெனப்படும் செய்யுள் வகை என்பது தெரித்து மொழிவார் அவை யடங்கியல் என்னாது அவையடக்கியல்' என்றார் தொல்காப்பியனார், 1. வல்லுதல் என்பது ஒன்றிற்கற்றுவல்லமையுடையராதல். கற்றுவல்லன. வற்றை வல்ல என வழங்குவர் அங்ஙனம் வல்லன அல்லாதனவற்றை வல்லா" என எதிர்மறுத்துரைத்தார். 癸 2. பூதத்தார் என்றது, பூதத்தாழ்வாரைக்குறித்தது எனக்கொள்ளுதற்கும் இடமுண்டு. 3. அளில் தபத் தெரிதல்-பிணக்கற ஆராய்தல். அரில்தபத்தெரியின் என்றமை கால் அவையடக்கியல் ஆசிரியத்தாலும் வெண்பாவாலும் வருதலேயன்றி சிறு பான்மை தொடர்நிலைச் செய்யுளாகிய காப்பியங்களில் கொச்சகவொரு போகாலும் வரும் எனக் கொண்டார் பேராசிரியர். சீவகசிந்தாமணிமுதலிய தொடர்நிலைக் செய்யுட்களில் அவையடக்கம் கொச்சகவொருபோகிற் பயின்றுள்ளமை காண்க.