பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளம்க ருருள் (இ ள்) ஒத்தாழிசைக் கலிக்கு உறுப்பாகிய ஒத்தாழிசை யும், ஆசிரியப்பாவின்கண் நிலைமண்டிலம் அடிமறிமண்டிலம் என்பனவும், ஒத்தாழிசைக்கும் கொச்சகத்திற்கும் பொதுவாகிய குட்டமும் நாற்சீரடிக்குப் பொருந்தின என்றவாறு. மேல் ஆசிரியப்பாவின் ஈற்றயலினும், இடையினும், முச். சீரும் இருசீரும் ஐஞ்சீரும் அறுசீரும் வரும் என்றதனானே, எல்லாவடியும் ஒத்து வருவனவு முளவென மண்டிலம் கூற. வேண்டிற்று.3 கலிப்பாவிற்குச் சுரிதகம் ஈற்றடி முச்சீரானும் ஈற்றயலடி முச்சீரானும் வரும் என்றமையால், தாழிசையுந் தரவும் நாற்சீ. ரானல்லது பிறவாற்றான் வாராவெனக் கூறல் வேண்டிற்று : குட்டமெனினும் தரவெனினும் ஒக்கும். இனிக் கலிக்குறுப்பாகிய சின்னங்கள் இருசீரானும் முச்சி ரானும் வருதலானும் தனிச்சொல் ஒருசீரானும் வருதலானும் வேறு ஓதவேண்டிற்று.5 உதாரணம் முன்னர்க் காட்டுதும். (கக.க) 1. இங்கு ஒத்தாழிசை' என்றது, ஒத்தாழிசைக்கலிப்பாவாகிய பாளினை யுணர்த்தாது அப்பாவுக்கு உறுப்பாகிய ஒத்தாழிசையினை புணர்த்தியது. 2. மண்டிலயாப்பு' என்றது, நாற்சீரடியினால்வரும் நிலைமண்டில ஆசிரியம், அடிமறிமண்டில ஆசிரியம் ஆகிய ஆசிரியப்பாவின் வகையினை. குட்டம் என்றது, ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கும் கொச்சகக் கலிப்பாவிற்கும் பொதுவாக முதற்கண் வருதற்குரிய தரவு' என்னும் உறுப்பினையென்பது இளம்பூரணர் கருத்தாகும். இங்குக் கூறப்பட்ட நான்கும் நாற்சீரடியால் வருவன என்பார் நேரடிக்கு ஒட்டின என்றார். நேரடி-தாற்சீரடி ஒட்டுதல்-பொருந்துதல். 3. நாற்சீரடியால் இயல்வது ஆசிரியப்பா என்பது புலனாமாயினும் அதன் ஈற்றயலினும் இடையினும் முச்சீரும் இருசீரும் ஐஞ்சீரும் அறுசீரும் வரும் என ஆசிரியர் பின்னர்க் கூறுதலால் எல்லாவடிகளும் நாற்சீரான் இயன்றுவரும் ஆசிரியப்பாவும் உள என்பது அறிவித்தற்கு மண்டில யாப்பும் நேரடிக்கு ஒட்டின, என்றார். 4. கலிப்பாவின் உறுப்பாகிய சுரிதகம் ஈற்றடி முச்சீராலும் ஈற்றயலடி முச்சீராலும் வரும் என்றமையால் கலிப்பாவின் ஏனையுறுப்புக்களாகிய தரவும் தாழிசையும் முச்சீரடியாலும் வருமோ என்று ஐயுற்றார்க்கு அவை நாற்சீரடி யாலல்லது பிறவாற்றால் வருதலில்லை என ஐயமகற்றுதல் வேண்டி ஒத்தாழி. சையும் ........... குட்டமும் நேரடிக்கு ஒட்டின' என்றார் ஆசிரியர். குட்டம் என்றது ஈண்டுத் தரவினை என்பார் குட்டம் எனினும் தரவெனினும் ஒக்கும், என்றார் இளம்பூரணர். 5. கவிக்குறுப்பாகிய சின்னங்களாவன இருசீராலும் முச்சீராலும் வரும் எண் (அம்போதரங்க) உறுப்புக்கள். கலியுறுப்புகளுள் சின்னமும் தனிச்