பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஎஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இது, வெண்பா வென்னும் உறுப்பினை இன்னுழிப் பாவா மெனப் பொருளுஞ் செய்யுளும் பற்றி வரையறுக்கின்றது. (இ - ள்) நெடுவெண்பாட்டுங் குறுவெண்பாட்டுங் கைக் கிளையும் பரிபாடலும் அங்கதச் செய்யுளுமென ஐந்துந் தம்மின் ஒத்து வெண்பாவென்னும் உறுப்பினானே வகுக்கப்படும் (எ-று) நெடுவெண்பாட்டென்பன தாமுடைய பன்னீரடி உயர்பு, இழிபு ஏழடியாக வருவனவென்பது; எனவே, நாற்சீர், அளவடி. யாயினாற்போல நாலடியான் வருதலே அளவிற்பட்டதாகலான் ஐந்தடி முதலாக வருவன வெல்லாம் நெடுவெண்பாட்டென்றலே வலியுடைத்து. குறுவெண்பாட்டென்பன : இரண்டடியான் மூன்றடியான் வருவன: குறள் வெண்பா சிந்தியல் வெண்பா வெனப்படலும் ஒன்று; எனவே நான்கடியான் வருவன அளவியல் வெண்பா வெனப்படும். கைக்கிளைப் பொருண்மைத்தாகலின் மருட்பாவினையுங் கைக்கிளை யென்றான் பரிபாட லென்பது பரிந்துவருவது: அஃதாவது கலியுறுப்புப்போலாது பலவடியும் ஏற்று வருவது. அங்கதமென்பது, முகவிலக்கு முதலாகிய விலக்குறுப்பாகியும் பிறவாற்றானும் அவை பொருளாக வருவன ஒத்து' என்பது இலக்கணத்தில் திரியாதென்றவாறு. இதனது பயம்: கைக்கிளை வெண்பாவினான் 1. நாற்சீர் அளவடியானாற்போல நாலடியான் வருவதே அளவிற்பட்ட செய்யுளாதவின் வெண்பா என்னும் உறுப்பமைந்த செய்யுட்களுள் நாலடியால் வருவன அளவியல் வெண்பாவாகும். நாவடியின் மேல் ஐந்தடிமுதலாக வருவன வெல்லாம் நெடுவெண்பாட்டெனப்படும். நாலடியிற்குறைந்து மூன்றடியாலும் இரண்டடியாலும் வருவன குறுவெண்பாட்டெனப்படும். மூன்றடியால் வரும் குறுவெண்பாட்டினைச் சிந்தியல் வெண்பா எனவும், இரண்டடியால் வரும் குறுவெண்பாட்டினைக் குறள்வெண்பா எனவும் வழங்குவர். 2. கைக்கிளைப் பொருண்மைத்தாகிய மருட்டாவினைக் கைக்கிளை யெனப் பொருள் வகையாற் பெயர் கொடுத்தார். 3. பரிபாடல் என்பது கலியுறுப்புப்போலன்றிப் பலவடிகளையும் ஏற்று வரும் பாடலாகும். 4. அங்கதம் என்பது முகவிலக்கு முதலிய விலக்குறுப்பாகியும் பிறவாற். றானும் வசைபொருளாகி வருவன' எனத் திருத்துக 5. ஒத்தவையெல்லாம்’ என்புழி ஒத்தல் என்றது, வெண்பா என்னும் பாவுறுப்பிற் றிரியாமை இலக்கணத்தால் ஒத்தமைதலை,