பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஅச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் எாம்ரு கைக்கிளை தானே வெண்பா வாகி ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே. இனம் பூரணம் : என்-எனின். எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் துதலிற்று. (இ-ஸ்.) கைக்கிளைப் பொருண்மை வெண்பாவினால் வருதலின்றி முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவினாலும் வரும் என்றவாறு. இவ்வாறு வருவதனை மருட்டா என்ப. இக்கருத்தினானே மேல், - 'மருட்பா ஏனை இருசார் அல்லது தானிது என்னுந் தன்மை இன்றே” (தொல், செய், அக) என ஒதினார் என்று கொள்க. அது, 'உரவொலி முந்நீர் உவாய்நிமிர்ந் தன்ன கரவரு காமங் கனவ-இரவெதிர முள்ளெயி றிலங்கு முகிணகை வெள்வளை நல்காள் வீடுமென் உயிரே" (பு. வெ. கைக்கிளை - சு) என வரும். (ககரு) பேராசிரியம் : இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வெண்பா உறுப்பாகி வருமென்றான், அற்றன்றி வெண்பாவினோடு ஆசிரியப்பாவும் உறுப்பாகக் கைக்கிளை வரும் (எ - று). அங்ங்னம் வருவது மருட் பா வாகலாற் கைக்கிளைப் பொருளே மருட்பாவிற் குரித்தென்பது பெற்றாம்: பெறவே 1. வெண்பா முன்வந்து ஆசிரியம் பின்னாகி முடிவது மருட்பா என்பதனை 'மருட்பா ஏனை இருசாரல்லது தானிது வென்னுந் தன்மை யின்றே (செய். அக} என்ற சூத்திரத்தால் ஆசிரியர் முன்னர் விளக்கியுள்ளார் என்பதாம். .ே வெண்டா வுறுப்பாகிக் கைக்கிளைப்பொருள் வருமென மேலைச்சூத்திரத்திற்கூறிய ஆசிரியர், வெண்பாவினோடு ஆசிரியப்பாவும் உறுப்பாகக் கைக்கிளை வரும் என ஈண்டுக்கூறியதனால் அங்கனம் வெண்பா முன்வந்து அகவல் பின்னாகி மூடிவது மருட்டாவாதலின் மருட்பா கைக்கிளைப் பொருள்பற்றிவரும் என்பது பெறப்படும்.