பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஅசு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் எாம்க பரிபா டல்லே தொகைநிலை வகையின் இதுபா என்னும் இயனெறி இன்றிப் பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப. இளம்பூரணம் : என்-எனின். பரிபாடலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்), பரிபாடலாவது தொகைநிலை வகையாற் பா இது என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி எல்லாப் பாவிற்கும் பொதுவாய் நிற்றற்கு முரித்தென்று சொல்லுவர் என்றவாறு. உம்மை எச்சவும்மை யாகலான் இலக்கணங் கூறவும்படும்?. அது வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். பொதுவாய் நிற்றலாவது, 'ஆசிரியம் வஞ்சி வெண்பா கலிமருட்பா (செய்யுளியல். க.க) என்றோதப்பட்ட எல்லாப்பாவின் உறுப்பும் உடைத்தாதல். (க கசு) இது. பரிபாடற் காவதோர் புறனடையுணர்த்துதல் துத (இ - ள்.) பரிபாடல் வெண்பாவுறுப்பாக வரினும் இன்ன பா வென்ப துணராமைப் பொதுப்பட நிற்றற்கும் உரித்து (எ-று) 'மண்ணார்ந் திசைத்த முழவொடு கொண்டதோள் கண்ணோ டெனவிழுஉங் காரிகை கண்டார்க்குத் தம்மோடு நிற்குமோ நெஞ்சு (கடவுள் வாழ்த்து) எனப் பரிபாடல் வெண்பா உறுப்பாக வந்தது. 1. தொகை நிலைவிரியின் என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பா.ம். 2. தனக்கெனவரைந்து கூறப்படும் பாவுறுப்பின்றி ஆசிரியம், வஞ்சி வெண்பா, கலி என்னும் நால்வகைப்பாவினது ஒசையும் பெற்று வருவது பரிபாடல் என்பார், தொகை நிலைவகையின் இது பா என்னும் இயல்நெறியின்றி! என்றார். பொதுவாய் நிற்றற்கும் என்புழிஉம்மை, எதிரது தpஇய எச்சவும். மையாதலால், அடுத்துவரும் குத்திரத்தில் உள்ளவாறு சிறப்புமுறையில் இலக்கணங்கூறவும் பெறும் என்பதாம்.