பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா னாய்ன ருஅக (இகள்.) ம்ேற்சொல்லப்பட்ட பரிபாடற் பாட்டுப் பொது வாய்நிற்றலேயன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் எருத்தும் என்று சொல்லப்பட்ட நான்குந் தனக்குறுப்பாகக் காமங் கண்ணிய நிலைமையை உடைத்து என்றவாறு. எனவே, அறத்தினும் பொருளினும் வாராதாம். "வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே" (தொல், செய். க0ரு) எனச் சிறப்புவிதி யோதினமையால் நான்கு பாவினும் பரிபாடல் வெண்பா யாப்பிற்றாதலிற் கடவுள் வாழ்த்தாகியும் வரப்பெறும். கொச்சிகமென்பது ஜஞ்சீரடுக்கி வருவனவும் ஆசிரியவடி, வெண்iாவடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, சிடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகையடியானும் அமைந்த பாக்களை உறுப்பாக வுடைத்தாகி வெண்பா வியலாற் புலப்படத் தோன்றுவது. இதனுட், 'சொற்சீ ரடியும் முடுகியல் அடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும்” (செய்யுளியல். க.க.அ) 1. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்பனவற்றைத் தனக்குரிய உறுப்புக்களாகப் பெற்றுக் காமப்பொருண்மை குறித்து வருதல் பரிபாடற்குரிய சிறப்பியல்பாகும் என்றவாறு. .ே அறமுதலாகிய மும்முதற்பொருள்களுள் காமங்கண்ணிய நிலைமைத்தாய் வருவது பரிபாடல் எனவே, ஏனைய அறம் பற்றியும் பொருள்பற்றியும் வாராதென்பதாயிற்று. எனினும், வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே என ஆசிரியர் சிறப்பு விதி கூறினமையாலும் நான்கு பாவினும் பரிபாடல் வெண்பாயாப்பிற்றாதலானும் பரிபாடல் கடவுள்வாழ்த்தாகியும் வரப்பெறும் என விளக்கந் தந்தார் இளம்பூரணர். இவ்விளக்கம் சங்கச்செய்யுட்களாகிய எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடலை யுளங்கொண்டு எழுதப்பெற்றதெனத் தெரிகிறது. காமங் கண்ணிய நிலைமைத் தாகும்' என்றதொடர் உலகியலில் அகத்தினையொழுகலாறாகிய காமப்பொருண்மையுடன், ‘காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினுமென்மனார் புலவர்' (தொல், புறத். உங்} எனப் பாடாண்பகுதி பற்றிய காமப்பொருண்மையினையும் ஒருங்குசுட்டி நிற்றலால், எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடலும் கடவுள்வாழ்த்தாகவும் காமங்கண்ணிய நிலைமைத்தாகவும் தொல்காப்பியனார் கூறிய பரிபாடல் இலக்கணத்திற்கு ஒத்த இலக்கியமாக அமைந்துள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும்.