பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీగా శ్రీ. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நச்சினார்க்கினியம் : இதுவு மதற் குள்ளுறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உள் ளுறுப்பாய் நிற்றற்குரியவாம். எ-று. அடியென்றதனான் முற்கூறியவடியோடு தொடர்ந்தல்லது தாமாக வாராவென்றுணர்த்துக. சொற்சீரடி மேற்கூறுப. முடு கியலடியாவது, வெண்பாவோடு விராய்த்தொடர்ந் தொன்றாக நிற்கும். அராகமாவது, தாமே வேறு சில வடியாய்வரும். உரிய வெனவே கலிக்கு இத்துணை யுரிய வல்லவென்றுணர்க. எனவே அராகவுறுப்புத் தேவபாணிக்கல்லது வாரா வென்றுணர்க. ஆய்வுரை : இதுவும் அது. (இஸ்) சொற்சீரடியும் முடுகியலடியும் மேற்குறித்த பரி பாடலுக்கு உரியவாகும் எறு. சொற்சீரடியின் இலக்கணம் அடுத்த சூத்திரத்திற் கூறப்படும். 'முடுகியலாவது ஐந்தடியானும் ஏழடியானும் ஆறடியானும் குற்றெழுத்துப் பயிலத் தொடுப்பது என்பர் இளம்பூரணர். 'முடுகியலென்பது முடுகியலோடு விராஅய்த் தொடர்ந் தொன்றாகிய வெண்பாவடி என்பர் பேராசிரியர். எம்க கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்து முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் ஒழியசை யாகியும் வழியசை புணர்த்துஞ்: சொற்சீர்த் தி லுதல் சொற்சீர்க் கியல்பே இளம்பூரணம் : என்-எ னின். சொற்சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இள்.) கட்டுரையாவது பாட்டின்றித் தொடுக்கப்பட்டு வருவது. 1. பேராசிரியர் உரையை அடியொ ற்றியது. پ، ۰-- عصر مس - سده 2. முட்டடி என்பது பேராசிரியருரையிற் கண்டபாடம். 3. புனர்ந்தும் எனப் பாடங் கொள்வர் பேராசிரியர்.