பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<9 @一@一 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் பன்மாடக் கூடன் மதுரை நெடுந்தெருவின்’ என்பதும் அது. நெடுவெண்பாட்டு வந்தவழிக் கண்டுகொள்க. (கருஅ) நச்சினார்க்கினியம் : இது முறையே வெண்பாவின் அடியளவைக் கூறுகின்றது. (இ-ள்). நெடுவெண்பாப் பேரெல்லை பன்னீரடியையுடைத்து. குறுவெண்பாச் சிற்றெல்லை யீரடியையுடைத்து. எ-று. இதனை வெண்பாட்டளவிற் கெல்லையென்னாது குறு வெண்பாட்டு நெடுவெண்பாட்டெனப் பெயர் கொடுத்துக் குறுமையும் நெடுமையும் அளவியலோடு படுத்துக் கொள்ளப்படுதலின் அளவியல் வெண்பாட்டு முளவென்பது உம், அது சிறப்புடைத்தென்பது உம் பெறுதும். எனவே,நெடுவெண்பாவின் பன்னீரடியிற் பாகமாகிய ஆறடியே யளவியல் வெண்பாவுக்குப் பேரெல்லையாகவும், அதன்பாகமாகிய மூன்றடி யே குறுவெண்பாவிற்குப் பேரெல்லையாகவுங் கோடும். அங்ங்ணங் கொள்ளவே நெடுவெண்பாவிற் கிழிந்த வெல்லை யேழடியாகவும் அளவியல் வெண்பாவுக்கு இழிந்தவெல்லை நான்கடியாகவுங் கொள்ளப் படும். இங்ங்ணம் அளவியல் வெண்பாச் சிறப்புடைமை நோக்கி யாசிரியர் 'அம்மை தானே யடிநிமிர் வின்றே (செய்.உ) என்று நெடுவெண்பா தேர்ந்திலர். அடிநிமிர் வின்றென்றது ஆறடியின் மிகாமையை உரையிற் கோடலென்பதனாற் செப்பிக் கூறுஞ் செய்யுட்கு நான்கடியே மிக்க சிறப்புடைத்தெனக் கொள்க “சிறப்புடைப் பொருளைப் பிற்படக் கிளத்தல்” என்பதனாற் குறுவெண்பாவுஞ் சிறப்புடைமை பெறுதும். இக்கருத்தானே கீழ்க்கணக்கில் நான்கடியும் ஈரடியுமே மிக வந்தவாறும் முத்தொள்ளாயிரத்து நான்கடியே மிக வந்தவாறுங் காண்க. உ-ம் யாதானு நாடாமல்” (திருக் கூட கூஎ) "இருதேவர் பார்ப்பா ரிடை” (ஆசாரக், ங் க) "துகடிர் பெருஞ் செல்வம்' (நாலடி. செல்வ) "இனிதுண்பா னென்பா னுயிர்கொல்லா துண்டான் முனிதக்கா னென்பான் முகனொழிந்து வாழ்வான் 1. இச்சூத்திரவுரை பேராசிரியருரையின் சுருக்கமாகும்.