பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா வருக. يه سيتي ينسبي இனி அதனிலையாகிய ஆண்பாற் கைக்கிளை ஆசிரியத்தானும் வஞ்சியானும் வருதலும் பிறவும் இன்னோரன்னவெல்லாம் புலனெறி வழக்கினுட் காட்டல் வேண்டுமென மறுக்க ! என்றார்க்கு வரைவுகடாதற்கண்னுந் தலைவனை அன்பிலனாகச் சொல்லுவன பாடாண்டிணைக் கைக்கிளை யாகாவோவெனின், “அவை சுட்டி யொருவர் பெயர்’ (தொல்-அகத்-54) கொள்ளாமையின் ஆகாவென்பது. அஃதேல், ‘விடியல்வெங் கதிர்காயும் வேயம லகலறை (கலி 45) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுள், 'கால்பொர நுடங்கல கறங்கிசை யருவிநின் மால்வரை மலிகனை மலரேய்க்கு மென்பதோ புல்லாராப் புணர்ச்சியாற் புலம்பிய வென்றோழி பல்லிதழ் மலருண்கண் பசப்பநீ சிதைத்ததை” எனவும், "நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும்’ (கலி-99) என்னும் மருதப்பாட்டினுள், 'அறனிழ லெனக்கொண்டா யாய்க்குடைப் யக்குடைப் புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை’ எனவும் இவை சுட்டியொருவர் பெயர் கொள்ளாக் கைக்கிளை வந்தனவாலெனின். அற்றன்று; தலைமக னன்பின்மையே மெய் யாயினன்றே அன்னதாவது; இவை அன்னவின்றி வரைவு 1. பொருட்பகுதியமைந்த செய்யுட்களின் மரபு பற்றிய இவ்வியல் பறியாதார் ஒருபொருள் நுதலிவரும் கலிவெண்பா வொழிந்தன வெண்பா என்று அடிவரையறை கூறாதொழிவர். இவ்வாறு மரபுகெடக்கூறின் ஒருவனைத் தலைமகனாய்ப் பெயர்கூறி நிறுத்தி அவனைக் காதலித்து இவள் இவ்வாறாயினாள் என ஆசிரியத்தாலும் வஞ்சிப்பாவாலும் பொருள் வேறுபட்ட ஒருசார்க் கொச்சசுக்கவிப்பாவாலும் செய்யுள் செய்தலும் இனி, அதனிலையாகிய ஆண்பாற்கைக்கிளை ஆசிரியத்தாலும் வஞ்சியாலும் வருதலும் பிறவும் இத்தகைய மரபு மாற்றங்கள் புலநெறி வழக்கிற் காட்டுதல் வேண்டும். மரபுக்கு மாறுபட்ட இவை சங்கச் செய்யுட்களில் இல்லாமையால் அன்னோர் கூற்றுப் பொருந்தா தென மறுக்க என்றவாறு.