பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளருரு ஆதிச் சி ஆதி (இ-ள்) புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் செவி. யறிவுறு உவும் எனப் புறத்திணைக்கண் நிலைபெற்ற திறத்தின வாகிய மூன்று பொருள்களையும் உறுதிப்படத் தெரிந்துரைப்பின் முறையே வெண்பாவின் இயல்பும் ஆசிரியப்பாவின் இயல்பும் ஆக இருதிறப் பண்பும் தம்மிற் பொருந்த முடியும் பாவாகிய மருட்பாவினிடத்தன எ-று. பண்புற முடிதலாவது வெண்பா, ஆசிரியம் என்னும் இரு வகைப்பாவின் பண்பும் தத்தம் இயல்பு வழாது பொருந்தி முடிதல். பாவின-பாவின் இடத்தன எனக் குறிப்பு முற்றாகக் கொள்க. மருட்பா முதற் சூத்திரத்திற் குறித்த கைக்கிளைப் பொருளுடன் இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட புறநிலை, வாயுறை, செவியறிவுறுஉவும் ஆக நான்கு பொருளினல்லது வாராதென்பதாம்" ளருரு. பரிடா டல்லே* நாலி ரைம்ப துயர்படி பாக ஐயைத் தாகும் இழிபடிக் கெல்லை. இ ைம்பூர ைம் : என்.எனின். பரிபாடற்கு அடிவரையறை உணர்த்துதல் துதலிற்று. (இ.ஸ்) பரிபாடற் செய்யுள் நானுாறடி யுயர்பாக இருபத்தைந்தடி இழிபாக வரும் என்றவாறு : எனவே, இடையெல்லா அடியானும் வரப்பெறும் என்றவாறு. கலிப்பாவினுள் ஒத்தாழிசைக்கு அளவு மேற்கூறப்பட்டது.” கலிவெண்பாட்டுக்கு வரையறை யில்லை யெனப்பட்டது.8

  • பரிபாட்டெல்லை எனப்பாடங்கொள்வர் பேராசிரியரும் தச்சினார்க்கினியரும். 1. பரிபாடல் அடிக்கு எல்லை உயர்பு நாலிரைம்பது அடியாக இழிபு ஐயைந்தாகும் என முடியும். உயர்பு-பேரெல்லை. தாலிரைம்பது, நானூறு. இழிபு-சிற்றெல்லை. ஐயைந்து-இருபத்தைந்து,

2. ஒத்தாழிசைக் கவிப்பாவுக்கு அளவு இவ்வியல் ள் சிரு-ஆம் சூத்திரத்திற் கூறப்பட்டது. 3. கலிவெண்பாட்டுக்கு அடிவரையறை யில்லை யென்பது விடுசி-ஆம் சூத்திரத்திற் கூறப்பட்டது.