பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா காக அருக. (இபள்). ஒரு .....னும் எ-து அந்நூல் ஒருபொருளே கருதிவருஞ் சூத்திரத்தானும், இன . - னும் எனது இனமாய பொருளைக் கூறிய வோத்தினானும், பொது ... ... தானும் எமது பல பொருட்குப் பொதுவாகிய இலக்கணங்களைக் கூறிய படலத். தானும். மூன்று ... ... னும் எது மூன்றுறுப்பை யடக்கிவரும் பிண்டத்தானும். என் ... ... ப எது என்று கூறிய அத்தன்மைத் தாகிய மரபினான் நடக்குமென்று கூறுவர் புலவர், எ-று. ஆங்கென்ற மிகையாற் பிண்டமேயன்றிப் பிண்டியென்பதும் ஒன்றுளதென்று கொள்க. ஆய்வுரை : இது மேற்குறித்த நால்வகையாமாறு இவையென உணர்த்துகின்றது. (இ-ள்) ஒரு பொருளையே துதலிவரும் சூத்திரமும், ஒரீனப் பொருள்களையே தொகுத்துரைப்பதாகிய ஒத்தும், பல பொருட்கும் பொதுவாகிய இலக்கணம் கூறும் படலமும், இங்கு எண்ணப்பட்ட இம்மூன்றுறுப்புக்களையும் தன்னகத்தே கொண்ட பிண்டமும் என இந்நான்கு வகையால் நடக்கும் என்பர் ஆசிரியர் எறு. சூத்திரம் என்னும் ஒருறுப்பால் இயன்றது இறையனார் களவியல். சூத்திரம், ஒத்து என்னும் இரண்டுறுப்புக்களையுடைய தாய் இயன்றது பன்னிருபடலம். சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்றுறுப்புக்களையடக்கிய பிண்டமாக அமைந்தது இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியம். இவை முறையே சிறுநூல், இடைநூல், பெருநூல் என எண்ணப்படும். இனி, அகத்தியம் என்பது, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றிற்கும் முறையே இலக்கணங்கூறும். மூன்று பகுதி 1 , பிண்டத்தையடக்கி நிற்பத பிண்டி எனப்படும். இயற்றமிழிலக்கண மாகிய தொல்காப்பியம் சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கி நின்தமையின் மூன்றுறுப்படக்கிய பிண்டம் எனப்பட்டது. இங்ஙனம் அமைந்த இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிண்டங்களையும் தன்னகத்தே அடக்கி நிற்பது அகத்தியம் என்னும் முத்தமிழிலக்கணம் என்பவாதலின் அந்நூல் பிண்டத்தினை யடக்கிய பிண்டி யெனப்படும். இவ்வியல் ள எஉ-ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை இங்கு ஒப்புநோக்கத்தகுவ. தாகும்.