பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரு.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் அது கிளவியாக்க முதலாக எச்சவியல் ஈறாகக் கிடந்த ஒன்பதோத்தினும் வேறுபாடுடையவாயினும், சொல்லிலக்கணம் உணர்த்தினமையாற் சொல்லதிகாரம் எனப் பெயர் பெறுதல். அதிகாரம் எனினும் படலமெனினும் ஒக்கும். (ககாசு) இது, மேல் (விசுக) பொதுமொழி கிளந்த படல மெனப் பட்டதற்கு இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருநெறியவன்றிப் பல்வேறு வகைப்பட்ட பொருளெல்லாவற்றிற்கும் வேறு வேறு இலக்கணங்கூற துத லின் அவற்றுக்குப் பொதுவாகி வருவது படலம் (எறு) பொதுமொழி கிளந்த படலம் என்றவழி ஒரு நெறிப் பொருட்குப் பொதுவாகப்பட்டதனை விலக்கி ஈண்டு விரவிய பொருட்குப் பொதுவாக மொழிவதே படலமென்றா னென்பது. அவை அதிகாரங்களாமெனக் கொள்க. (க எ க) நச்சினார் த் திரிைதும் : இது முறையே படலங் கூறுகின்றது (இ, ள்). ஒருபொருள்நெறியன்றிப் பலவேறுவகைப்பட்ட பொருளெல்லாவற்றிற்கும் வேறுவேறிலக்கணங் கூறக்கருதி யவற்றுக்குப் பொதுமொழியாகத் தொடர்ந்துவரின் அது படலமாம். எ-று. "பொதுமொழி கிளந்த படலம்’ எனவே யொருநெறிப்பட்ட பொருட்குப் பொதுவாய் வருதலையும் விலக்கி விரவிய பொருட்குப் பொதுவாக மொழிவது படலமாயிற்று. படலமா வது அதிகாரமாம். ஆய்வுரை : இது, பொதுமொழி கிளந்த படலம் என்பதன் இலக்கணம் உணர்த்துகின்றது. 1. பொதுமொழிகிளந்தபடலம் என்றவழி ஒரு நெறிப்பட்ட பொருளுக்கும் பொதுவாய் வரும் இலக்கணத்தினை விலக்கிப் பலவாய் விரவிய பொருட்கட்குப் பொதுவாகிய இலக்கணங்களைக் கூறுவதே படலம் என்னும் அதிகாரமாம் எனக்கொள்க. 2. ஒருநெறிப்பட்ட இனப்பொருட்குப் பொதுவாய் அமைவது ஒத்து என மேற்குத்திரத்திற் கூறிய ஆசிரியர் அங்ங்னம் பலவாகவிரவிய பொருட்கும் பொதுவாக மொழிவதே படலம் என்றார் என்பதாம்,